அதிரை ரயில் சேவை.. டெல்லி சென்று எம்பிக்களை சந்தித்த அதிராம்பட்டினம் ரயில் பயணிகள் நல சங்கத்தினர்

Editorial
0

அதிராம்பட்டினம் ரயில் பயணிகள் நல சங்க தலைவர் M.S.ஷிஹாபுதீன் மற்றும் A.அப்துல் ரஜாக் ஆகியோர் தஞ்சாவூர் எம்பி பழனிமாணிக்கம் தலைமையில் ரயில்வே போர்டு சேர்மன் மற்றும் தொடர்புடைய அதிகாரிகளை சந்தித்து அதிராம்பட்டினத்திற்கான ரயில் தேவைகள் தொடர்புடைய கோரிக்கைகளை விரிவாக எடுத்துரைத்தனர்.

குறிப்பாக அதிராம்பட்டினத்தில் அனைத்து ரயில்களும்  நின்று செல்ல வேண்டும் என்றும் சென்னை எழும்பூரிலிருந்து அதிராம்பட்டினம் வழியாக ரமேஸ்வரம், காரைக்குடி வரை இரவு நேர ரயில் சேவை வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

அதிராம்பட்டினம் ரயில் பயணிகள் நல சங்கத்துடன் இணைந்து கிழக்கு ரயில்வே பயணிகள் சங்கத்தினரும் ரயில் தேவைகளை எம்பி கார்த்திக் சிதம்பரம் மூலமாக ரயில்வே அமைச்சர்
அஸ்வினி வைஷ்னவிடம் கோரிக்கை மனு அளித்தனர். அதேபோல் திருச்சி எம்பி திருநாவுக்கரையும் சந்தித்து கோரிக்கை மனுவை வழங்கினர்.

Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...