அதிரையில் நைட் ஷிப்ட் பார்க்கும் மழை.. 2 நாட்களில் 10 செமீ கொட்டிருச்சே

Editorial
0
தஞ்சாவூர்: கடந்த 2 நாட்களில் அதிராம்பட்டினத்தில் இரவு நேரத்தில் மட்டும் பெய்த மழையில் அளவு 10 செமீ ஆக பதிவாகியுள்ளது.

நேற்று சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், "தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, நேற்றுதமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில  இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும். கடலூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, சேலம், திருச்சிராப்பள்ளி, திண்டுக்கல், சிவகங்கை, மதுரை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது

இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில  இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும்.

14.08.2023 முதல் 18.08.2023 வரை: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும்." என்று தெரிவித்தது.

வெள்ளிக்கிழமை இரவு அதிராம்பட்டினம் AWS (தஞ்சாவூர்), ) 6 செமீ மழை பெய்துள்ளது." என்று தெரிவித்தது. இந்த நிலையில் நேற்று இரவும் மழை கொட்டித்தீர்த்தது. இதுகுறித்து காலை வானிலை மையம் வெளியிட்ட அறிவிப்பில் அதிராம்பட்டினத்தில் 4 செமீ மழை கொட்டி இருப்பதாக கூறியுள்ளது.


Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...