அதிரை YOUTH MILAN சிறுவர் விளையாட்டு போட்டி.. ஹஜ் பெருநாளை சிறப்புக்கும் சிஸ்யா! விண்ணப்பிக்க ஸ்கேன் பண்ணுங்க

Editorial
0
அதிரை ஷம்சுல் இஸ்லாம் சங்கம் இளைஞர் அமைப்பு சார்பில் ஹஜ் பெருநாள் மறுநாள் சிறுவர்களுக்கான விளையாட்டு போட்டியும், ஜூலை 1 ஆம் தேதி யூத் மிலன் என்ற பெயரில் அனைத்து முஹல்லா இளைஞர் சந்திப்பு நிகழ்ச்சியும் நடத்த உள்ளது

இதுகுறித்து அவர்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "அஸ்ஸலாமு அழைக்கும், ஷம்சுல் இஸ்லாம் சங்க இளைஞர் அமைப்பு (SISYA) சார்பாக ஹஜ் பெருநாளை முன்னிட்டு 'YOUTH MILAN' மாபெரும் இளையோர் சந்திப்பு நிகழ்ச்சி இன்ஷா அல்லாஹ்  30.06.2023 வெள்ளிக்கிழமை மற்றும் 01.07.2023 சனிக்கிழமை ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. 

முதல் நாள் அன்று  10 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் &                         8 வயதிற்குட்பட்ட சிறுமியர்களுக்கான விளையாட்டுப்போட்டிகள் நடத்தப்பட்டு தொடர்ந்து பரிசளிப்பு நிகழ்ச்சி நடைபெறும்.

இப்போடிகளில் பங்குபெற விரும்புபவர்கள் கீழே உள்ள ஃபார்மில் முன்பதிவு செய்துக்கொள்ளுங்கள் 01.07.2023 அன்று மாலை 4:30 மணி முதல் 6:30 மணி வரை Youth Milan எனும் இளைஞர்கள் சந்திப்பு  நடைபெற உள்ளது. ஷம்சுல் இஸ்லாம் சங்க முஹல்லாவை சார்ந்த (அனைத்து இளைஞர்கள்) மற்றும் பிற சங்கங்களை சார்ந்த இளைஞர் அமைப்பு நிர்வாகிகளுடனான சந்திப்பு நடைபெற உள்ளது. இதில் சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொள்ள உள்ளார்கள்.

இந்நிகழ்வுகளில் அனைவரும் தவறாது கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டு கொள்கிறோம்." என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.

Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...