ஆஸ்திரேலியாவில் அதிரையர்களின் உற்சாகமான ஹஜ்ஜு பெருநாள் கொண்டாட்டம்

Editorial
0
ஆஸ்திரேலியாவில் உள்ள ஆபர்ன் மஸ்ஜித் உமர்-இல் நடைபெற்ற ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகையில் அதிரையர் கலந்து கொண்டனர். இதர பகுதிகளில் வாழ்வோர் லக்கம்பா பெரிய பள்ளிவாசலிலும், பரமட்டா ஜூம்ஆ பள்ளிவாசலிலும் நடைபெற்ற பெருநாள் தொழுகையில் கலந்து கொண்டனர்.
 தொழுகை முடிந்ததும் ஒருவரையொருவர் கட்டித் தழுவி, பெருநாள் வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு பகிர்ந்து கொண்டனர். பள்ளியின் வெளிப்புறத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஒட்டகம் மற்றும் குதிரை ஏற்றம், குடை ஊஞ்சல் மற்றும் இதர ஆட்டங்களில் சிறுவர் சிறுமியர் பங்கேற்று மகிழ்ந்தனர். சிறு தூரலோடு கூடிய மக்கள் சந்திப்பில் ஆபர்ன் நகரம் களைகட்டியது என்றால் அது மிகையன்று.

தகவல் மற்றும் புகைப்படம்
அதிரை என். ஷஃபாத்

Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...