அதிரை ஊடகங்களை இனி அச்சுறுத்த முடியாது.. உருவானது அதிரை பிரஸ் ப்ரொடெக்சன் கவுன்சில் (APPC)

Editorial
0
அதிராம்பட்டினம்: அதிரையில் செயல்பட்டு வரும் ஊடகங்களின் உரிமைகளையும், பத்திரிகையாளர்களின் பாதுகாப்பையும் உறுதிபடுத்த ADIRAI PRESS PROTECTION COUNCIL என்ற பெயரில் புதிய பத்திரிகையாளர் சங்கம் தொடங்கப்பட்டு உள்ளது.

இதுகுறித்து அந்த சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "பத்திரிகை துறைக்கும் அதிரைக்கும் நீண்ட கால தொடர்பு உள்ளது. 20 ஆண்டுகளுக்கு முன்பாகவே அதிரையில் இணைய ஊடகங்கள் தொடங்கி செயல்பட்டன. அதன் தொடர்ச்சியாக பல்வேறு ஊடகங்கள் அதிரையில் தொடங்கப்பட்டு மக்களின் குரலாக ஒலித்துக்கொண்டு இருக்கின்றன. பெரும்பாலான ஊடகங்கள் பொருளாதார நோக்கமின்றி மக்கள் நலன் கருதியே செயல்பட்டு வருகின்றன.
இவ்வாறு சுயநலனின்றி பொதுநலனுக்காக பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் இயங்கி வரும் இணைய ஊடகங்களும் அதன் ஆசிரியர்களும் பத்திரிகையாளர்களும் பல்வேறு மிரட்டல்கள், அச்சுறுத்தல்கள், தாக்குதல்களுக்கு ஆளாகின்றனர். நியாயமான விசயங்களுக்கு குரல் கொடுத்ததற்காக அதை எழுதியவரையும் அவர்களின் குடும்பத்தினரையும் சமூக புறக்கணிப்பு செய்யும் அவலமும் தொடர்கிறது. தனிப்பட்ட முறையில் பத்திரிகையாளர்கள் மீது அவதூறுகள் பரப்பப்படுகின்றன.

இப்படி பல்முனைத் தாக்குதல்களுக்கு உள்ளாகும் பத்திரிகையாளர்களின் நலன் கருதி ADIRAI PRESS PROTECTION COUNCIL என்ற பெயரில் பத்திரிகையாளர் சங்கம் தொடங்கப்பட்டு உள்ளது. அதிரையின் முன்னணி இணைய ஊடகங்களான அதிரை எக்ஸ்பிரஸ், அதிரை பிறை, டைம்ஸ் ஆஃப் அதிரை, அதிரை இதழ் ஆகியவற்றின் ஆசிரியர்கள் இணைந்து இந்த சங்கத்தை தொடங்கியுள்ளார்கள். மக்களுக்காக குரல் கொடுக்கும் பத்திரிகையாளர்களின் உரிமை குரலாக நமது சங்கம் நிச்சயம் செயல்படும்." என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.

Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...