ஆஹா.. அதிரை மஸ்ஜிதில் இஃப்தாருக்கு இப்படி ஒரு கஞ்சியா? ருசித்து வியந்த நோன்பாளிகள்

Editorial
0
இதுகுறித்து காதிர் முகைதீன் பள்ளி  தமிழாசிரியர் கவிஞர் கல்லிடைக் குயில் உமர் பாரூக் அவர்கள் தெரிவிக்கையில் "அதிரையில் முதன் முறையாக சிறுதானிய கஞ்சி விநியோகம்!

 ஒவ்வொரு பள்ளிவாசலிலும் வருடந்தோறும் நோன்பு திறக்கும் போது
பச்சை அரிசியினால் தயார் செய்யப்பட்ட
கஞ்சி வழங்குவது வாடிக்கை!

அதேபோல்,சிறு தானியங்களைக் கொண்டு கஞ்சி தயாரிக்க வேண்டும் என்று ஊடகங்களில் பல பதிவுகள் வருவதும் வாடிக்கை! அதைப் படித்து அப்போதே மறந்து போவதும் வாடிக்கை!

ஆனால்,அதிரை பேருந்து நிலையத்தில் அமைந்துள்ள அல்அமீன் பள்ளியோ, இதனை செயல்படுத்தினால் என்ன? என்று களத்தில் இறங்கியது.

இந்தப் பள்ளியின் முக்கிய புள்ளி,சமூக நல ஆர்வலர் குலோப் ஜாமூன் அன்சாரி அவர்கள் தன் உறவினரோடு இதனை ஏற்பாடு செய்தார்.

அதிரை அறிவாலயம் என்ற வாட்ஸ்அப் குழுவில் "சிறு தானியக் கஞ்சியினை அருந்த வாருங்கள்" என்ற பதிவைப் பார்த்துவிட்டு, வழக்கமாக நான் செல்லும் பள்ளிக்குப் பதிலாக அங்கு ஓடோடிச் சென்றேன்.

 "குதிரை வாலி,
கேழ்வரகு,
சாமை,
தினை,வரகு,
கம்பு, பனிவரகு,
சோளம் இவற்றுடன்
வல்லாரை
அரைக்கீரை
தண்டுக் கீரை போன்ற பத்து வகையான கீரைகளைச் சேர்த்து அரைக்கப்பட்ட
சத்தான உடலுக்கு கெத்தான ஒரு மூலிகை கஞ்சியை நோன்பு திறக்கும் போது ருசித்து உண்டேன்.
இவற்றுடன் வடை, பேரீச்சம் பழம், தர்பூசணி ஜுஸ், கடற்பாசி
போன்றவையும் பரிமாறப்பட்டது.

சிறு தானியக் கஞ்சி எப்படி இருக்குமோ?என்ற நினைப்பில் சென்ற அனைவருக்கும்,
"அடடா! இப்படி ஒரு அருமையான சுவையிலே நோன்பு கஞ்சி எப்படி தயாரித்தார்கள் என்று குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ஆனந்தமடைந்ததைப் பார்க்க முடிந்தது.

டெல்டா மாவட்டங்களில் முதன் முறையாக இந்த முயற்சியை முன்னெடுத்து, இனி வரும் காலங்களில் இதனைத் தொடரப் போவதாகக் கூறிய
 குலோப் ஜாமூன் அன்சாரி அவர்களைச் சந்தித்து பாராட்டிவிட்டு வந்தேன்." என்று பதிவிட்டுள்ளார்.

Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...