அதிராம்பட்டினத்துக்கு கூட ஸ்பெல்லிங் தப்பு.. டென்டர் விண்ணப்பத்தில் மலைபோல் பிழை

அதிராம்பட்டினம் நகராட்சியில் நிறைவேற்றப்படும் அரசு திட்டங்களுக்கு முறைப்படி டெண்டர் கோரப்பட்டு ஒப்பந்ததாரர்கள் தேர்வு செய்யப்பட்டு வருகிறார்கள். இதற்கான விண்ணப்ப படிவங்கள் அரசு விதிப்படி ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்படுகின்றன. இதனை பதிவிறக்கம் செய்து விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அனுப்புவார்கள்.

அந்த வகையில் அதிரையில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டத்திற்கான பொது உணவு கூடத்தை அண்ணா தெருவில் அமைப்பதற்காக ரூ.28 லட்சத்துக்கு டெண்டர் கோரப்பட்டு ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்பட்டு இருந்தது. ஆனால், அந்த படிவத்தில் பல பிழைகள் உள்ளதாக குற்றம்சாட்டப்படுகிறது. 
அதில் டெண்டர் ஏற்றுக்கொள்ளும் படிவத்தில் FROM என்ற இடத்தில் அதிராம்பட்டினம் நகராட்சி ஆணையர் என்று குறிப்பிடப்பட்டு உள்ளது. FROM இல் இருப்பவர் தானே கையெழுத்திட வேண்டும். ஆனால், கையெழுத்திடும் இடத்தில் சம்பந்தமே இல்லாமல் பட்டுக்கோட்டை நகராட்சி ஆணையர் என்று குறிப்பிட்டுள்ளார்கள். அதிராம்பட்டினம் டெண்டருக்கு எப்படி பட்டுக்கோட்டை நகராட்சி ஆணையர் கையெழுத்திட முடியும்?
அதேபோல் அந்த கடிதத்தில் வார்த்தைகளுக்கு இடையே இடைவெளி இன்றி யாருக்கும் புரியாத வகையில் அச்சிட்டுள்ளனர். இது தொடர்பாக ஆன்லைனில் வெளியிடப்பட்டுள்ள தகவலில் ADMIRAMPATTINAM என்று ஊர் பெயரையே தவறாக குறிப்பிட்டு உள்ளனர். இதனால் அந்த விண்ணப்பங்களை எப்படி பயன்படுத்துவது என்ற குழப்பமே மிஞ்சுகிறது.



Post a Comment

0 Comments