அதிரை பெரியோர்களே.. பெரிய மனுஷனா நடந்துக்கோங்க! பள்ளிவாசலில் சிறுவர்களை விரட்டாதீர்

இது புனிதமிக்க ரமலான் மாதம் என்பதால் சிறுவர்களை பள்ளி வாசல்களில் அதிகளவில் காண முடிகிறது.

சில சிறுவர்கள் விளையாடுவதுடன், தொழும் நேரங்களில் பேசுவது பலருக்கு இடையூறாக இருக்கிறது. இதனால் பள்ளி வாசல்களில் இருக்கும் சிறுவர்கள் வெளியே விரட்டப்படுகின்றனர்.
- File Image

சிறுவர்களின் முதிர்ச்சி அவ்வளவு தான். அதே சமயம் தொழுகைக்கு வரும் சிறுவர்கள் இது போன்ற செயலில் ஈடுபடும் பொழுது அவர்களை கண்டித்து பள்ளியின் கண்ணியத்தை எடுத்து கூற வேண்டும். யாரையும் பள்ளியில் இருந்து விரட்டியடிக்க யாருக்கும் உரிமை இல்லை என்பதை பெரியவர்கள் உணர வேண்டும்.

இன்று விரட்டப்படும் சிறுவர்களுக்கு இதனால் எதிர்காலங்களில் பள்ளி வாசல் மீது நாட்டமில்லாமல் போனால் நிச்சியம் அந்த சிறுவனை விரட்டியவர்க்கும் பாவத்தில் பங்குண்டு என்பதனை மனதில் கொள்ள வேண்டும்.
- File image

எளியவர்களிடம் நம் வீரத்தை காட்டுவதில் எந்த ஒரு அர்த்தமும்மில்லை. அவர்களிடம் அன்பாக எடுத்து கூறினாலே மாற்றி கொள்வார்கள்.

(இது ஒரு பள்ளியில் மட்டும் நடந்ததல்ல பல பள்ளிகளில் இப்படி நடந்து வருகிறது.)

- அதிரை சாலிஹ்

Post a Comment

0 Comments