அதிரை மக்களுக்கு முக்கிய அறிவிப்பு.. நாளை தடை செய்யப்படும் மின்சாரம்

Editorial
0

அதிராம்பட்டினம் 33-11KV துணைமின் நிலையத்தில் அக்டோபர் மாதத்துக்கான பருவகால பராமரிப்பு பணிகள் இன்று 12.10.2022 காலை 9.00 முதக்ஷ்ல் மாலை 5.00 மணி வரை நடைபெற இருக்கிறது.

எனவே அதிராம்பட்டினம், ராஜாமடம், மகிழஙகோட்டை, புதுக்கோட்டை உள்ளூர், தொக்காலிக்காடு உள்ளிட்ட பகுதிகளுக்கு மின் விநியோகம் இருக்காது என்று  பட்டுக்கோட்டை  மின்வாரிய உதவி செயற்பொறியாளர் அறிவித்திருந்தார்.

இதற்கு விவசாயிகளும், வியாபாரிகளும், பொதுமக்களுக்கும் ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது. இந்த நிலையில் இன்று அதிரையில் மின் தடை இல்லை என்ற செய்தி வேகமாக பரவி வந்தது.

இது தொடர்பாக நாம் அதிரை மின்வாரிய உதவி செயற்பொறியாளரை தொடர்புகொண்டு விளக்கம் கேட்டோம். அதற்கு பதிலளித்த அவர், "அதிரையில் இன்று (12-10-2022) காலை 9 - மாலை 5 மணி வரை அறிவித்தபடி மின் தடை செய்யப்படும். முத்துப்பேட்டையில் மட்டுமே மின்தடையை தள்ளி வைத்து இருக்கிறார்கள்." என்றார்.

 அறிவிக்கப்பட்ட நேரத்திற்கு முன்பு மின்சாரம் தடை செய்யப்பட்டாலோ,  5 மணிக்கு மேல் மின் தடை தொடர்ந்தாலோ 04373242444 என்ற மின் வாரியம் எண்ணை தொடர்புகொள்ளவும்.

Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...