சென்னையில் கிளினிக் தொடங்கும் அதிரை மருத்துவர் அஹமது முஹைதீன்

Editorial
0
அதிரை சி.எம்.பி. லேனை சேர்ந்த மர்ஹூம் அஹ்மத் தாஸீம் (தாஸீம் டிராவல்ஸ் உரிமையாளர்) அவர்களின் மகன் A.T.அஹமத் முகைதீன். சென்னை மற்றும் அதிரை இமாம் ஷாபி பள்ளியில் பள்ளிப்படிப்பை மேற்கொண்ட இவர் இளங்கலை ஹோமியோபதி மருத்துவப்படிப்பை சென்னையில் உள்ள  பல்கலைக்கழகத்தில் படித்தார். அதில் மாநில அளவில் மூன்றாம் இடம் பெற்ற சாதனை படைத்தார்.

முதுகலையில் (M.D) குழந்தைகள் நல ஹோமியோபதி மருத்துவப் படிப்பை கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரத்தில் நிறைவு செய்தார். பள்ளியில் முதன்மை மாணவராக திகழ்ந்த இவர் பல்வேறு போட்டிகளில் பங்குபெற்று தேசிய அளவிலும், சர்வதேச அளவிலும் விருதுகளை வென்றுள்ளார். குழந்தைகள் செல்போனுக்கு அடிமையாவது தொடர்பாக ஆய்வு செய்து அறிக்கையையும் இவர் வெளியிட்டு இருக்கிறார்.

இளங்கலை மருத்துவம் முடித்தவுடன் தொலைப்பேசி வாயிலாகவும், அதிரைக்கு வரும் நாட்களில் தனது வீட்டிலேயே நோயாளிகளை வரவழைத்து மருத்துவ ஆலோசனைக்களை வழங்கியும் சிகிச்சையும் அளித்து வருகிறார்.

கொரோனா பரவலின்போதும் ஓய்வின்றி அதிரை மக்களுக்கு மருத்துவ சேவை செய்ததுடன், அர்செனிக் ஆல்பம் என்ற ஹோமியோபதி மருந்தையும் பரிந்துரைத்து விழிப்புணர்வை ஏற்படுத்தினார். இவருக்கு பின்னரே மற்ற மருத்துவர்களும் இந்த மருந்தை பரிந்துரைக்க தொடங்கினர்.

கடந்த ஜனவரி மாதம் அதிரை சி.எம்.பி.லேனில் உள்ள தனது வீட்டின் அருகிலேயே ATM என்ற பெயரில் தனியாக கிளினிக்கை தொடங்கி நடத்தி வந்தார். இந்த நிலையில் சென்னை முட்டுக்காட்டில் செயல்பட்டு வரும் ஒன்றிய அரசின் மாற்றுத்திறனாளிகளுக்கான ஹோமியோபதி ஆராய்ச்சி நிறுவனத்தில் இளநிலை ஆராய்ச்சியாளராக பணிபுரிந்து வருகிறார்.
விடுமுறை காலத்தில் ஊருக்கு வரும்போது நோயாளிகளை சந்தித்து வந்த இவர் தற்போது சென்னையில் கிளினிக் தொடங்க இருக்கிறார். ஆயிரம் விளக்கு பகுதியில் அஜீஸ் முல்க் முதலாவது வீதியில் முதல் மாடியில் வரும் திங்கள்கிழமை கிளினிக் தொடங்க உள்ளார். இரவு 8:30 மணி முதல் 9:30 மணி வரை சந்திக்கலாம் என்று அவர் அறிவித்துள்ளார்.

தொடர்புக்கு: 7358051252


Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...