அதிரை பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோருக்கு சிக்கல்.. அரசு வெளியிட்ட முக்கிய ஆணை

Editorial
1
அதிராம்பட்டினம்: 54 ஆண்டுகள் பழமையான பட்டுக்கோட்டை கல்வி மாவட்டத்தை தஞ்சாவூருடன் இணைக்கும் அரசின் திட்டத்தால் பள்ளி ஆசிரியர்கள், மாணவர்களுக்கு சிரமம் ஏற்படும் வாய்ப்பு உருவாகியுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டத்தில் தஞ்சாவூர், பட்டுக்கோட்டை, கும்பகோணம், ஒரத்தநாடு ஆகிய கல்வி மாவட்டங்கள் உள்ளன. இதில் பட்டுக்கோட்டை கல்வி மாவட்டம் மட்டுமே கடந்த ஆண்டு வரை 10 மற்றும் 12-ம் வகுப்பு தேர்ச்சி விழுக்காட்டில் முதலிடத்தில் உள்ளது. 1968-ம் ஆண்டு தொடங்கப்பட்ட பட்டுக்கோட்டை கல்வி மாவட்டம் 54 ஆண்டுகளாக சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

இதில் அதிராம்பட்டினத்தில் உள்ள பள்ளிகள் உட்பட 56 அரசு மற்றும் அரசு உதவி பெறும் மேல்நிலை பள்ளிகள், 52 அரசு மற்றும் அரசு உதவி பெறும் உயர்நிலைப் பள்ளிகள் உள்ளன. 55 ஆயிரத்து 118 மாணவ-மாணவிகள் இந்த கல்வி மாவட்டத்தில் படித்து வருகிறார்கள். 2,207 ஆசிரியர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் பணிபுரிந்து வருகிறார்கள்.

பட்டுக்கோட்டை கல்வி மாவட்டம், தஞ்சாவூர் கல்வி மாவட்டத்துடன் இணைக்கப்படுவதால் இந்த கல்வி மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் மேல்நிலை, உயர்நிலைப்பள்ளிகளில் படிக்கும் மாணவர்களும், அவர்களது பெற்றோரும் ஏறக்குறைய பல கிலோ மீட்டர் பயணித்து தஞ்சைக்கு செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

மாணவ, மாணவிகளின் நலன் கருதி பட்டுக்கோட்டை கல்வி மாவட்டம் தொடர்ந்து செயல்பட வேண்டும் என்பதே பலரது எதிர்பார்ப்பாக உள்ளது.

Post a Comment

1Comments
  1. Hunter, an employee of General Electric, according to the Royal Society of Chemistry . It wasn't till the 1930s, nevertheless, that William J. Kroll invented a course of that made extracting titanium titanium possible on an industrial scale. The so-called Kroll course of first treats titanium oxide ore with chlorine, producing titanium chloride. Next, magnesium or sodium are mixed with the titanium chloride in argon fuel . Under temperatures of 2,192 F , the magnesium or sodium reduces the titanium chloride to pure titanium. This course of is about 10,000 instances less environment friendly as the process used to make iron, according to the RSC, which helps explain why titanium is the costlier metallic.

    ReplyDelete
Post a Comment
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...