அதிரை சிட்னி நடத்திய ஜூனியர் கிரிக்கெட் தொடர்.. ASC சாம்பியன்

அதிரையில் பல ஆண்டுகளாக சிறுவர்கள், இளைஞர்கள் கிரிக்கெட் விளையாடினாலும், பல்வேறு தொடர்களை நடத்துனாலும் நமதூரிலிருந்து மாநில அளவிலான அணிகளுக்கு செல்வதில்லை. இறுதியில் கிரிக்கெட் திறமையை மூட்டை கட்டிவிட்டு பொருளாதார தேவைக்காக வேறு பணிகளுக்கு சென்று விடுகின்றனர். 
இந்த நிலையை மாற்றும் வகையில் நமதூர் சிறுவர்களை இளம் வயதிலேயே தொழில்முறை போட்டிக்கு தயார்படுத்தும் முயற்சியில் அதிரை சிட்னி கிரிக்கெட் அணி நிர்வாகம் இறங்கியுள்ளது. இதற்காக  STITCH பந்தில் விளையாட சிறுவர்களுக்கு உரிய பாதுகாப்பு உபகரணங்களுடன் பயிற்சி அளித்து வருகின்றனர். நமதூர் சிறுவர்களை மேலும் ஊக்கப்படுத்தும் வகையில் 16 வயதுக்கு உட்பட்டோருக்காக சிட்னி ப்ரீமியர் லீக் என்ற பெயரில் கிரிக்கெட் தொடரை கடந்த 2021 ஆகஸ்டு மாதம் நடத்தினர்.
அந்த வகையில் தற்போது 18 வயதுக்கு உட்பட்டோருக்காக STITCH பந்து கிரிக்கெட் தொடரை சிட்னி அணி நடத்தி முடித்துள்ளது. உள்ளூர் அணிகள் மட்டும் கலந்துகொண்ட இத்தொடரில் WSC மைதானத்தில் நடைபெற்று வந்த நிலையில் மழை குறுக்கிட்டதால் இறுதிப் போட்டியை நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டது. இந்த நிலையில் நேற்று இறுதிப் போட்டி சிட்னி மைதானத்தில் நடைபெற்றது. 
WCC, ASC அணிகள் மோதிய இப்போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ASC 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. முதல் பரிசாக ASC க்கு ரூ.3,000, இரண்டாம் பரிசாக WSC க்கு ரூ.2,000 வழங்கப்பட்டது. சிறந்து பேட்ஸ்மேன் பரிசை ASC யின் சுஹைலும், பந்துவீச்சாளருக்கான பரிசை ASCயின் சந்துருவும் பெற்றனர்.

Post a Comment

0 Comments