அதிரை வருகிறான் "கம்பன்".. இனி வாரம் 4 நாள் சென்னைக்கு ரயிலில் போய் வரலாம்

Editorial
0
சென்னை - காரைக்கால் இடையே இயக்கப்பட்டு வரும் கம்பன் எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில் சேவையை நீட்டிக்க வேண்டும் என்ற மதுரை எம்பி சு. வெங்கடேசன் கோரிக்கையை ஏற்று ரயில்வே வாரியத்துக்கு தெற்கு ரயில்வே பொது மேலாளர் பரிந்துரை செய்துள்ளார்.

Advertisement



தாம்பரம்- செங்கோட்டை இடையே அதிரை ரயில்நிலையம் அமைந்துள்ள திருவாரூர் - காரைக்குடி வழியாக வாரம் மூன்று முறை விரைவு ரயில் விட பொது மேலாளர் ரயில்வே வாரியத்துக்கு பரிந்துரை செய்துள்ளார். இதுகுறுத்து சு.வெங்கடேசன் வெளியிட்ட பதிவில், "கம்பன் எக்ஸ்பிரஸ் விரைவு ரயில் திருவாரூர் காரைக்குடி பிரிவில் விரிவுபடுத்த என் கோரிக்கையை ஏற்று தெற்கு ரயில்வே பொது மேலாளர் செய்துள்ள இந்த பரிந்துரையை வரவேற்கிறேன்! அவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்!
கம்பன் விரைவு ரயில் திருவாரூருக்கும் காரைக்குடிக்கும் இடையே மீண்டும் இயக்க நான் ஆகஸ்ட் 31ஆம் தேதி தெற்கு ரயில்வே பொது மேலாளருக்கு கடிதம் எழுதினேன். மக்கள் கோரிக்கையை நான் அவருக்கு தெரிவித்தேன். பொது மேலாளர் செப்டம்பர் 26 தேதியிட்ட பதில் கடிதத்தை எனக்கு அனுப்பியுள்ளார்.

அதில் தாம்பரத்துக்கும் செங்கோட்டைக்கு இடையே திருவாரூர் திருத்துறைப்பூண்டி பட்டுக்கோட்டை காரைக்குடி வழியாக வாரம் மூன்று முறை ஒரு புதிய ரயிலை இயக்க கால அட்டவணை ரயில்வே வாரியத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது. ரயில்வே கால அட்டவணை குழு இதனை கால அட்டவணையில் சேர்க்க ஏற்பாடு செய்யும் என்று பதில் அளித்துள்ளார்.
ஏற்கனவே தீபாவளிக்காக சென்னை சென்ட்ரலில் இருந்து இதே வழியாக ஒரு சிறப்பு ரயிலை இயக்க பொது மேலாளர் அனுமதி அளித்துள்ளார். 
என் கோரிக்கையை ஏற்று இந்த புதிய ரயிலை இயக்க ஏற்பாடு செய்த பொது மேலாளருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் .இந்த கோரிக்கையை என்னிடம் கொண்டு வந்த பொது மக்களுக்கும் இயக்கங்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்." என்று குறிப்பிட்டுள்ளார்.

ஏற்கனவே வாரம் ஒரு நாள் அதிரை - சென்னை இடையே ரயில் இயக்கப்பட்டு வரும் சூழலில் கம்பன் ரயில் சேவை நீட்டிக்கப்பட்டால் வாரம் 4 முறை சென்னைக்கு ரயில் சேவை கிடைக்கும்.

Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...