அதிரை டூ சென்னை “இரவு” ரயில் பயணம்.. வாய்ப்பு இருக்கு! ஆனால் நீங்க இதை செய்யனும்

Editorial
0

அதிராம்பட்டினம்: திருவாரூர் காரைக்குடி அகல இரயில் பாதையில் சென்னை க்கான விரைவு இரயில் இயங்கி 16 வருடங்கள் ஆகின்றன. மீண்டும் கம்பன் விரைவு இரயிலை இயக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது. தற்போது இந்த கம்பன் விரைவு இரயில் கிடைக்குமா என தெரியவில்லை. தாம்பரம் செங்கோட்டை வாரம் மும்முறை விரைவு இரயிலை இத்தடத்தில் இயக்க இரயில்வே நிர்வாகம் ஒப்புதல் அளித்துள்ளது.

Advertisement


இரவு நேர பணிக்கு ஸ்டேஷன் மாஸ்டர்கள் கேட் மேன்கள் நியமிக்கப்படுவதில் கால தாமதம் ஏற்பட்டு வருகிறது. அதற்கான தொடர் முயற்சிகளும், இரயில்வே நிர்வாகத்தின் நடவடிக்கைகளும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. எனவே சென்னைக்கான இரவு நேர விரைவு இரயில் நமது தடத்தில் இயக்கப்படுவதில் கால தாமதம் ஏற்பட்டு வருகிறது.

ஆனால் பகல் நேரத்தில் நமது தடத்தில் உள்ள பயணிகள் ரயில் சென்னைக்கு சென்று வர ஒரு வாய்ப்பு உள்ளது. திருச்சி - சென்னை சோழன் பகல் நேர அதிவிரைவு இரயிலுக்கு இணைப்பு இரயிலாக காரைக்குடி மயிலாடுதுறை விரைவு இரயிலை இயக்க தென்னக இரயில்வே திருச்சி கோட்ட இரயில்வே மேலாளர் அலுவலகம் தயாராக இருப்பதாக தெரிகிறது.

புது டெல்லியில் உள்ள இரயில்வே போர்டு ஒப்புதல் அளித்தால் இந்த இரயில் உடன் இயக்கப்படும் வாய்ப்பு உள்ளது. இந்த தடத்தில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் இதற்காக கோரிக்கை வைத்து வருகிறார்கள். இது தொடர்பாக இரயில் பயணிகள் நலச் சங்கங்கள் சார்பில் பத்திரிகைகள், சமூக வலைதளங்கள் மூலமாக தொடர்ந்து கோரிக்கை வைக்க்கப்பட்டு வருகிறது.

தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, சிவகங்கை, இராமநாதபுரம், நாடாளுமன்ற உறுப்பினர்கள், அனைத்து அரசியல் கட்சி தலைவர்கள்  இரயில்கள் பயணிகள் சங்கங்கள், வர்த்தக சங்கங்கள், தன்னார்வ அமைப்புகள் தொடர்ந்து டெல்லியில் உள்ள இரயில்வே வாரிய தலைவருக்கு கோரிக்கை வைத்தால் காரைக்குடி மயிலாடுதுறை விரைவு இரயில் கிடைக்க வாய்ப்புள்ளது

இந்த இரயில் சோழன் அதிவிரைவு இரயிலுக்கு இணைப்பு இரயிலாக மட்டும் அல்லாமல் காரைக்குடியில் இருந்து மயிலாடுதுறைக்கு காலை 08.00 மணிக்கு புறப்படும் இரயிலாகவும் அமையும். எனவே மயிலாடுதுறை, திருவாரூர், திருத்துறைப்பூண்டி, தில்லைவிளாகம் முத்துப்பேட்டை, அதிராம்பட்டினம், பட்டுக்கோட்டை, பேராவூரணி அறந்தாங்கி, காரைக்குடி பகுதியில் உள்ள அனைவரும் இணைந்து கோரிக்கை வைக்க பட்டுக்கோட்டை ரயில் பயணிகள் நலச்சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...