பாப்புலர் ஃபரண்ட் ஆஃப் இந்தியா அலுவலகங்களில் NIA சோதனை நடத்தப்பட்டதை கண்டித்து அதிரையில் வரும் 28ம் தேதி மாலை 4 மணிக்கு தக்வா பள்ளி அருகிலிருந்து பேரணி தொடங்கி பேருந்து நிலையம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் அறிவித்துள்ளது.
இது குறித்து அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில், "இந்தியா முழுவதும் கிளை பரப்பி மக்களுக்கான சேவைகளை செய்துவரும் தேசிய மக்கள் இயக்கமான பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மீது களங்கம் ஏற்படுத்தும் வகையில் ஒன்றிய பாஜக அரசு தனது அதிகார துஷ்பிரயோகம் மூலம் NIA, ED, CBI உள்ளிட்ட நிறுவனங்களைக் கொண்டு சோதனைகள் என்ற பெயரிலும், பொய் வழக்குகளை புனைந்தும் தொடர்ந்து அடக்குமுறைகளை ஏவி வருகிறது.
அதன் தொடர்ச்சியாக 22/09/2022 அன்று நள்ளிரவு முதல் 13 மாநிலங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட பாப்புலர் ஃப்ரண்ட் அமைப்பின் தேசிய, மாநில மற்றும் மாவட்ட அளவிலான தலைவர்களின் வீடுகளில் சோதனை என்ற பெயரில் தேசிய புலனாய்வு முகமையின் (NIA) அத்துமீறல் நடைபெற்றுள்ளது. பாப்புலர் ஃப்ரண்டின் நூற்றுக்கும் மேற்பட்ட தலைவர்களை கைது செய்து அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
இத்தகைய எதேச்சதிராக நடவடிக்கைகளை அதிராம்பட்டினம் அனைத்து ஜமாஅத் மற்றும் அனைத்து இயக்கங்களின் கூட்டமைப்பு வன்மையாக கண்டிக்கிறது.
ஒன்றிய பாஜக அரசின் தோல்விகளை அம்பலப்படுத்தும் மக்கள் அமைப்புகளின் செயல்பாடுகளை தடுக்கும் விதமான ஜனநாயக விரோத நடவடிக்கைகளை ஒன்றிய அரசு நிறுத்திக் கொள்ள வேண்டும். அடிப்படை ஆதாரமற்ற சோதனைகளை காரணம் காட்டி கைது செய்யப்பட்ட அனைத்து பாப்புலர் ஃப்ரண்ட் தலைவர்களும் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும் என அதிராம்பட்டினம் அனைத்து இஸ்லாமிய கூட்டமைப்பு வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.
பேரணி மற்றும் கண்டன ஆர்ப்பாட்டம் நாள் 28/07/2022 புதன்கிழமை
இடம்; தக்குவா பள்ளி பேரணி துவக்கம்
ஆர்ப்பாட்டம் பேருந்து நிலையம்."