அதிரை கடற்பகுதியில் அரசின் புதிய திட்டம்.. இந்தியாவிலேயே இதான் பெருசு! தமிழ்நாட்டில் இதுவே முதல்முறை

Editorial
0
அதிராம்பட்டினம்: அதிராம்பட்டினம் தொடங்கி அம்மாப்பட்டினம் கடல் வரை  கடற்பசு பாதுகாப்பகம் அமைக்க தமிழ்நாடு அரசு அரசாணை.

அரிதான கடல்பசு இனம் தமிழகத்தில் அழிந்து வரக்கூடிய நிலையில் உள்ளது. இதை அடுத்து கடல் பசு இனத்தையும் அதன் வாழ்விடத்தையும் பாதுகாக்க மன்னார் வளைகுடா, பாக். விரிகுடா பகுதிகளில் கடற்பசு பாதுகாப்பகம் அமைக்கப்படும் என கடந்த செப்டம்பர் மாதம் தமிழக சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டது.

அதனை செயல்படுத்தும் விதமாக அதிராம்பட்டினம் தொடங்கி அம்மாப்பட்டினம் கடல் வரை  கடற்பசு பாதுகாப்பகம் அமைக்க தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இந்தியாவிலேயே முதல்முறையாக பார்க் நீரிணையில் 446 சதுர கிலோமீட்டர் பரப்பளவில்  கடல் பசு பாதுகாப்பகம் அமைக்கப்படும் என அறிவித்துள்ளது. கடல் பசு இனங்களை பாதுகாப்பதனால் கடல் பகுதிகளுக்கு அடியில் உள்ள கடல் புற்கள் பாதுகாக்கப்படும் எனவும், வளிமண்டல கார்பனை அதிக அளவில் நிலைப்படுத்த கடற்பசு பாதுகாப்பகம் உதவும் எனவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

கடல்புல் படுகைகள் மீன்கள் இனப்பெருக்கம் செய்வதற்கு ஏதுவாக மேம்படுத்தப்படும் என்றும், தற்போது 240 கடல் பசுக்கள் மட்டுமே உள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது என்றும் தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. பெரும்பாலான கடல் பசுக்கள் தமிழ்நாட்டின் கடற் பகுதிகளிலேயே காணப்படுவதாகவும், கடல் பசுக்களின் வாழ்விடங்களை அழிவில் இருந்து பாதுகாக்க வேண்டிய உடனடி தேவை எழுந்துள்ளதாகவும் குறிப்பிட்டிருக்கிறது. உள்ளூர் மீனவர்களுடன் ஆலோசனை நடத்தி கடல்பசு பாதுகாப்பகம் அமைப்பது தொடர்பான அறிக்கை வெளியிடப்பட்டுள்ளதாகவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...