அதிரையில் ஆடு, மாடு, கோழி வளர்ப்போரா நீங்க? இந்த முகாமை மிஸ் செய்யாதீங்க

Editorial
0
அதிரை அருகே புதுக்கோட்டை உள்ளூரில் நாளை (29-09-2022) மாபெரும் இலவச கால்நடை சிகிச்சை முகாம் நடைபெற இருக்கிறது. புதுக்கோட்டை உள்ளூர் சமுதாய கூடத்தில் காலை 7 மணி முதல் இந்த முகாம் நடைபெறுகிறது.

இதில்,  கோழிகளுக்கு கோழிக்கழிச்சல் தடுப்பூசி போடுதல், நீண்ட நாட்களாக சினை பிடிக்காத மாடுகள், பருவத்திற்கு வராத மாடுகள் போன்றவற்றை சிறப்பு ULTRA SOUND SCAN மூலம் பரிசோதனை செய்யப்பட்டு தீர்வுகள் (மலடு நீக்க சிகிச்சை) வழங்குவது. 30 முதல் 40 நாட்கள் இளஞ்சினை போன்றவற்றை சிறப்பு ULTRA SOUND SCAN மூலம் பரிசோதனை செய்யப்பட்டு சினை கண்டறிவது. சினை பருவ அறிகுறிகள் உள்ள மாடுகளுக்கு செயற்கை முறை கருவூட்டல் செய்தல் செய்யப்படுகிறது.

ஆடுகள் மற்றும் கன்றுகளுக்கு குடற்புழு நீக்கம். காளைகள் மற்றும் கிடாக்களுக்கு ஆண்மை நீக்கம். சுண்டு வாத அறுவை சிகிச்சை. நோய்வாய்ப்பட்ட கால்நடைகளிலிருந்து சளி, பால், தோல், இரத்தம் போன்றவற்றின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு நுண்ணோக்கிகள் மூலம் உடனடியாக தேவையான ஆய்வுகள் செய்யப்பட்டு தகுந்த சிகிச்சை மற்றும் ஆலோசனை அளிக்கப்படுகிறது.  அனைத்து வகையான கால்நடைகளிலும் எல்லா வகையான நோய்களும் கண்டறியப்பட்டு தேவையான சிகிச்சை அளிக்கப்பட உள்ளாது.

மேலும் தாது உப்பு, அடர்தீவனம், பால் பொருட்கள், இறைச்சி பொருட்கள், கால்நடை தீவனப் பயிர்கள் குறித்த சிறப்பு கண்காட்சி சமுதாயக்கூட அரங்கில் நடைபெறுகிறது. இந்த முகாமில் கலந்து கொள்ளும் கால்நடைகளில் சிறந்த பசுக்கள், கிடேரிக்கன்றுகள் மற்றும் சிறந்த கன்றுகள் தேர்ந்தெடுக்கப்பட்டு பரிசுகள் வழங்கப்படுவதுடன் பசுந்தீவனப் புல் கரணைகள் அளிக்கப்படுகிறது.

இவை அல்லாமல் கால்நடை வளர்ப்பு குறித்த பொதுவான ஆலோசனைகள், நோய்கள் கண்டறிதல், தடுப்பு முறைகள் மற்றும் சிறப்பு சிகிச்சைகளும் இம்முகாமில் கால்நடை மருத்துவ வல்லநர்கள் மற்றும் கால்நடை மருத்துவக் கல்லூரி பேராசிரியர்கள் மூலம் இலவசமாக அளிக்கப்பட உள்ளன.

இதில் புதுக்கோட்டை உள்ளூர், சுற்றுவட்டார கிராமங்கள் மற்றும் அதிராம்பட்டினம் நகராட்சியை சேர்ந்த பொதுமக்கள், கால்நடை வளர்ப்போர் கலந்து கொண்டு அரிய வாய்ப்பினை பயன்படுத்தி கால்நடைப் பொருட்கள் கண்காட்சியினை கண்டு களித்தும், தங்களது கால்நடைச் செல்வங்களுக்கு தேவையான சிகிச்சைகள் மற்றும் ஆலோசனைகளைப் பெற்றும் வளம் பெற கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

முகாம் கால அட்டவணை

Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...