அதிரையில் வேகமாக பரவும்"காய்ச்சல்".. குழந்தைகள் அதிகம் பாதிப்பு - "இன்ப்ளூயன்சா" வைரசா?

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் கடந்த சில நாட்களாக இன்ப்ளூயன்சா காய்ச்சல் தீவிரமாக பரவி வருகிறது. இந்தியாவில் தட்பவெப்பநிலை காரணமாக ஜூன் மாதம் இந்த காய்ச்சல் தொடங்கும்.

தற்போது தமிழக மக்களிடையே இன்புளுயன்சா காய்ச்சல் பரவி வருகிறது. முக்கியமாக குழந்தைகள், பள்ளி மாணவ, மாணவியர் இந்த காய்ச்சல் காரணமாக அதிகமாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

 ஒருவரிடம் இருந்து இன்னொருவருக்கு பரவும் குணம் கொண்ட இந்த காய்ச்சல் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் நிலையில் அதிராம்பட்டினத்திலும் இன்ப்ளூயன்சா காய்ச்சல் அதிகளவில் பரவி வருகிறதோ என்ற அச்சம் மேலோங்குகிறது.

அதற்கு காரணம் அதிரையில் வழக்கத்தை விட அதிகமான அளவில் பலருக்கு காய்ச்சல் ஏற்பட்டு இருக்கிறது. குறிப்பாக கைக்குழந்தைகள், சிறுவர்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். மருத்துவமனைகள், மருந்தகங்களிலும் வழக்கத்தைவிட மக்கள் கூட்டம் அதிகம் காணப்படுகிறது.

இந்த நோய் 4 நாட்கள் வரை இருக்குமென்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். ஆனால் அதிரை அரசு மருத்துவமனையில் இரவு நேர மருத்துவ வசதி முழுமையாக இல்லாத காரணத்தால் மக்கள் அவதிக்கு ஆளாகி வருகின்றனர்.

Post a Comment

0 Comments