அதிரை மாணவர்களின் கோடை விடுமுறையை பயனுள்ளதாக்கிய சிஸ்யா.. மாணவர்களை பாராட்டி சான்றிதழ்

Editorial
0
பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மாணவர்களின் நேரங்களை பயனுள்ளதாகவும் ஆக்கப்பூர்வமாகவும் மாற்ற ஷம்சுல் இஸ்லாம் சங்க இளைஞர் அமைப்பு சார்பில் கடந்த மாதம் கோடைகால பயிற்சி முகாம் தொடங்கப்பட்டது.



ஜுன் 06 ஆம் தேதி வரை நடைபெற்ற இந்த பயிற்சி முகாமில் சுமார் 100 மாணவர்கள் கலந்துகொண்டனர். இந்த வரலாற்று சிறப்புமிக்க முகாமில் பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கும் பங்கேற்பு சான்றிதழ் (PARTICIPATION CERTIFICATE) மற்றும் தொடர்ச்சியாக விடுப்பு எடுக்காமல் வந்த மாணவர்களுக்கு எழுதுபொருள், புத்தகம் உள்ளிட்டவைகளை ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தின் செயலாளர் A.H.ஹாஜா ஷரீப், துணைத்தலைவர் A.ஷரஃபுதீன், ஷிஸ்வா அமீர் M.S.M.யூசுஃப், சிஸ்யா தலைவர் Z.முஹம்மது தம்பி, செயலாளர் நஜ்புதீன், பொருளாளர் M.R.சாலிஹ், துணைத்தலைவர் M.F.முஹம்மது சலீம் மற்றும் நிர்வாகிகள் பரிசுகளை வழங்கி மாணவர்களை பாராட்டினர்.

விளம்பரம்: 

இதற்கான ஏற்பாட்டினை சிஸ்யாவின் செயற்குழு உறுப்பினர்கள் சிறப்பாக செய்திருந்தனர். கலந்து கொண்ட மாணவர்கள் வருங்காலங்களில் இதுபோன்ற பயனுள்ள முகாம்களை நடத்த வேண்டும் என கோரிக்கை வைத்தனர். 
இதுகுறித்த சிஸ்யா நிர்வாகம் தெரிவிக்கையில் "புகழனைத்தும் அல்லாஹ்விற்கே உரியது. சிஸ்யாவின் ஆக்கப்பூர்வமான பணிகள் உத்வேகத்துடன் தொடர்ந்து நடைபெறும். இம்முகாம் வெற்றிபெற உடலால் உழைத்து, உளமாற பிரார்த்தித்து, பொருளால் உதவிய அனைவருக்கும் ஜஸாக்கல்லாஹு கைர். உங்களின் அன்பும் ஆதரவும் எப்போதும் கிடைக்கும் என்கிற உணர்வோடு நமது பயணம் தொடரும்." என்றது.

Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...