ம்ம்ஹும்.. மேட்டூர் அணை திறந்து என்ன பயன்? அதிரை சி.எம்.பி. வாய்க்கால் சாக்கடையாக கிடக்குதே!

Editorial
0
டெல்டா பாசன விவசாயிகளுக்காக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீரை திறந்து வைத்தார். தொடர்ந்து அணியில் இருந்து வெளியேறும் தண்ணீரின் மேல் பூக்களைத் தூவி வரவேற்றார். முதற்கட்டமாக அணையில் இருந்து வினாடிக்கு 3,000 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

இந்த தண்ணீர் டெல்டா மாவட்டங்களுக்கு இன்னும் சில நாட்களில் வந்து சேரும். அங்குள்ள பாசன நிலங்கள், ஏரி, குளங்களை நிரப்பிவிட்டு தஞ்சையின் கடைமடை பகுதிகளான அதிராம்பட்டினம், ஏரிப்புறக்கரை, ராஜாமடம், மல்லிப்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளுக்கு இந்த தண்ணீர் வருவது என்பதே பல ஆண்டுகளாக போராட்டமாக இருந்தது. 

பல்வேறு போராட்டங்களுக்கு பின் அதிராம்பட்டினத்தின் நிலத்தடி நீர் மட்டத்தை அதிகரிக்க குளங்களுக்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டன. ஆனால், இந்த ஆண்டு மேட்டூர் அணை திறக்கப்பட்டபோதிலும் அதிரை நீர்நிலைகளுக்கு தண்ணீர் கொண்டு செல்லும் சி.எம்.பி. வாய்க்காலில் இன்றும் சாக்கடை நீர் ஓடிக்கொண்டிருக்கிறது.

இந்த சூழலில் தண்ணீர் திறந்துவிடப்பட்டால், கழிவுநீராகவே அது குளங்களில்போய் கலக்கும். அதிராம்பட்டினம் நகராட்சியில் அதிக சொத்து வரி செலுத்தும் பகுதியான சி.எம்.பி. வாய்க்காலில், அடிப்படை தேவையான கழிவு நீர் வடிகாலை அரசுகள் அமைக்காமல் உள்ளன. இதனால், பாசன வாய்க்காலான சி.எம்.பி. வாய்க்காலில் வீடுகளில் இருந்து கழிவுநீர் செல்லும் அவலம் தொடர்கிறது.
இதன் காரணமாக எத்தனை முறை சி.எம்.பி.வாய்க்காலை தூர்வாரினாலும் அதில் சில நாட்களிலேயே மீண்டும் கழிவுநீர் வந்துவிடும் அவலம் தொடர்கிறது. இதற்கு அப்பகுதியில் உள்ள வீடுகளின் மீது பழி சுமத்துவதை பல ஆண்டுகளாக ஆட்சியாளர்கள் கட்சி பாகுபாடின்றி செய்து வருகிறார்கள். இவர்கள் வாங்கும் வரிக்கு கழிவுநீர் வடிகாலை அமைத்து கொடுத்திருந்தால் மக்கள் ஏன் கழிவுநீரை சி.எம்.பி. வாய்க்காலில் திறந்துவிடப்போகிறார்கள். சொல்லப்போனால், இதனால் அப்பகுதி மக்களுக்கு சுகாதார கேடுதான் ஏற்படுகிறது.
எனவே உடனடியாக சி.எம்.பி. வாய்க்காலை தூர்வாரி குளங்களுக்கு தண்ணீர் செல்வதை உறுதி செய்வதுடன் இப்பிரச்சனைக்கு நிரந்தர தீர்வுகாண தனியாக கழிவுநீர் கால்வாயை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...