இதுகுறித்து அவர் எழுதிய மனுவில், "கடந்த 13-05-2022 அன்று முத்துப்பேட்டையில் அமைந்துள்ள ராமாஸ் ஹோட்டல் உரிமையாளருக்கும் கேரளாவிலிருந்து முத்துப்பேட்டை தர்காவிற்கு வந்தவர்களுக்கும் இடையில் உணவருந்துவதில் ஏற்பட்ட பிரச்சினை தொடர்பாக அன்றிரவு காவல்துறை உயர் அதிகாரிகள் தலையீட்டின் காரணமாக சமரசம் செய்து வைக்கப்பட்டு பிரச்சனை முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.
விளம்பரம்:
அதனை தொடர்ந்து முஸ்லிம்கள் மீது பழி சுமத்த வேண்டும் என்ற நோக்கத்தோடு அடுத்த நாள் அதிகாலை 5 மணியளவில் செம்படவன்காடு அருகில் உள்ள அதிமுக பிரமுகர் சந்திரபோஸ் என்பவர் வீட்டில் பாஜகவை சேர்ந்த வசந்தகுமார் என்பவன் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து பெட்ரோல் குண்டு வீசியுள்ளான்.
இந்நிகழ்வை முஸ்லிம்களோடு தொடர்புபடுத்தி முஸ்லிம்கள் தான் காரணம் என்றும் குற்றவாளிகளை உடனே கைது செய்யப்பட வேண்டும் என்றும் அப்படி கைது செய்யப்படாத பட்சத்தில் முத்துப்பேட்டையில் பாஜக சார்பாக போராட்டம் நடத்தப்படும் என பாஜகவின் மாநில பொதுச் செயலாளர் முருகானந்தம் என்பவர் மீடியாவில் பேட்டி கொடுத்து ஊரில் பதட்டத்தை ஏற்படுத்தினார்.
ஆனால் தமிழக முதல்வர் தளபதி ஸ்டாலின் தலைமையில் செயல்படும் தமிழக காவல்துறை மிகவும் பொறுமையாக கையாண்டு உண்மை குற்றவாளியான பாஜகவை சேர்ந்த வசந்தகுமார் என்பவனை கைது செய்து ரிமாண்ட் செய்துள்ளனர்.
பல்வேறு விசாரணைக்குப் பின்னர் உண்மை குற்றவாளியை கைது செய்த காவல் துறையை முழு மனதோடு பாராட்டுகிறேன். மேலும் வசந்தகுமார் என்பவன் தீவிர பாஜக தொண்டன், மேலும் அவனின் தாயார் பாஜக மகளிரணியினுடைய நிர்வாகியாக செயல்பட்டுக் கொண்டு இருக்கக் கூடியவர்.
குற்றவாளியான வசந்தகுமார் என்பவன் முத்துப்பேட்டையில் பல்வேறு குற்றச் சம்பவங்களில் தொடர்புடையவன். குறிப்பாக தனியார் பள்ளியினுடைய தாளாளர் சுவாமிநாதன், MMA லாட்ஜ் உரிமையாளர் எம்.அகமது ஜலாலுதீன் ஆல்வின் மோட்டார்ஸ் தாவுது அலி, பேப்பர் பன்னீர்செல்வம் மகன் புஷ்பராஜ் என பெரும் பட்டியலே உள்ளது.
மேலும் திமுக கவுன்சிலர் அய்யப்பன் என்பவரது இருசக்கர வாகனம் தீ வைத்து கொளுத்தப்பட்டது தொடர்பாகவும் கைது செய்யப்பட்டுள்ளான்.
முத்துப்பேட்டையில் தொடர்ந்து பெரும் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வரும் வசந்தகுமார் என்பவன் மீதும் அவனது கூட்டாளிகள் மற்றும் அவனுக்கு பின்னால் இருந்த இயக்கிக் கொண்டிருக்கும் கருப்பு முருகானந்தம் உட்பட அவனுக்கு ஆதரவாக செயல்பட்டு வரும் முத்துப்பேட்டை பாஜக நிர்வாகிகளின் மீதும் கடும் நடவடிக்கை மேற்கொண்டு குண்டர் தடுப்புச் சட்டத்தின் மூலம் கைது செய்து சிறையில் அடைத்து சமூக அமைதியை நிலைநாட்ட வேண்டி கேட்டுக்கொள்கின்றேன்." எனக் குறிப்பிட்டுள்ளார்.