அதிரை சம்சுல் இஸ்லாம் இளைஞர் அமைப்பு நடத்தும் பள்ளி மாணவர்களுக்கான மார்க்க - விளையாட்டு - கணினி பயிற்சி முகாம்

பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மாணவர்களின் நேரங்களை பயனுள்ளதாகவும் ஆக்கப்பூர்வமாகவும் மாற்ற ஷம்சுல் இஸ்லாம் சங்க இளைஞர் அமைப்பு சார்பில் வருகிற மே 21 முதல் ஜுன் 06 ஆம் தேதி வரை 6 ஆம் வகுப்பு முதல் 9ஆம் வகுப்பு வரை படிக்கும் பள்ளி மாணவர்களுக்கான கோடைகால பயிற்சி முகாம் ஷம்சுல் இஸ்லாம் சங்க வளாகத்தில் நடைபெறவுள்ளது.

விளம்பரம்:காலை 9 மணி முதல் 12.30 மணிவரை நடைபெறும் இம்முகாமில், 

1. இஸ்லாமிய பண்பியல் பயிற்சி, 
2. அடிப்படை கணினி பயிற்சி 
3. விளையாட்டு பயிற்சி

ஆகியவை நடைபெறவுள்ளது.
இக்கோடை கால பயிற்சி முகாம் துவங்க மிகக் குறுகிய நாட்களே இருக்கிறது. பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை இம்முகாமில் சேர்க்க முன்பதிவு செய்து கொள்ளவும்.

Post a Comment

0 Comments