அதிரையில் ஒன்றும் இல்லாத பகுதிக்கு அதிக வரி... நகராட்சி ஆணையரிடம் SDPI முறையீடு

அதிராம்பட்டினத்தில் வரி வசூல்தொடர்பாக பிரிக்கப்பட்ட மண்டலங்களை மறுபரிசீலனை செய்யக்கோரி நகராட்சி ஆணையர் சசிகுமாரை சந்தித்து SDPI கட்சியினர் நகரத் தலைவர், 13 வது வார்டு கவுன்சிலர் மற்றும் 17வது வார்டு செயலாளர் சார்பில் 3 மனுக்கள் அளிக்கப்பட்டது.

இதுகுறித்து நகராட்சித் தலைவருக்கு அவர்கள் எழுதிய மனுவில், "அதிராம்பட்டினம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 3 மண்டலங்களாக பிரித்து வரிவசூல் செய்வது தொடர்பாக கடந்த 12/042022 அன்று தாங்கள் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு இருந்தீர்கள்.
நகராட்சி அலுவலகத்தில் ஒட்டப்பட்ட மூன்று மண்டலங்களின் பட்டியலில் உள்ள தெருக்களில் A மற்றும் B மண்டலங்களில் உள்ள தெருக்கள் பலவற்றில் சாலை வசதிகள், கழிவுநீர் வடிகால் வசதிகள், கால்வாய் வசதிகள் உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்பு வசதிகள் எதுவும் இல்லாமல் உள்ளது.

மேலும் B மண்டலத்தில் உள்ள தெருக்களில் இருக்கும் வீடுகளுக்கு A மண்டலத்திற்கு விதிக்கப்படும் விகிதத்தில் வரி வசூல் செய்யப்படுகிறது.

ஆகவே தாங்கள் இந்த விஷயத்தில் தலையிட்டு மூன்று மண்டலங்களில் உள்ள தெருக்களை மறு பரிசீலனை செய்து புதிதாக A, B, C மண்டலங்களை அறிவிக்குமாறும், மேலும் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள கூடுதல் வரி விதிப்பை திரும்பப்பெற வலியுறுத்துமாறும் கேட்டுக்கொள்கின்றோம்." என கேட்டுக்கொண்டுள்ளனர்.

இந்த மனுவை பெற்றுக்கொண்ட நகராட்சி ஆணையர் அதுகுறித்து பரிசீலிப்பதாக தெரிவித்தார்.

Post a Comment

0 Comments