அதிரையில் இப்படியும் ஒரு வாட்ஸ் அப் குழு - 140 குடும்பங்களை மகிழ்வித்த "அதிரை சகோதரர்கள்"

Editorial
0
அதிராம்பட்டினம்: "அதிரை சகோதரர்கள்" என்ற வாட்ஸ் ஆப் குழுமம் சார்பில், ரூ.500 மதிப்பிலான மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்பை 140 ஏழை குடும்பங்களுக்கு வழங்கியுள்ளது.

நமதூரில் எத்தனையோ வாட்ஸ் அப் குழுமங்கள் தொடங்கப்பட்டு வீண் பேச்சுக்களிலும், குழப்பங்களை ஏற்படுத்துவதிலும் காலம் கடத்தி வரும் நிலையில் அதிரை சகோதரர்கள் என்ற வாட்ஸ் அப் குழுமம் 2016 ஆம் ஆண்டிலிருந்து துவங்கப்பட்ட நாள் முதல் இன்று வரை பல உதவிகள் செய்து வருகிறது.

இந்த ஆண்டு ரமலான் மாதத்தில் பொருளாதார ரீதியாக நெருக்கடியில் இருக்கும் 140 ஏழை குடும்பங்களை தேர்வு செய்து ரூ.500 மதிப்பிலான உணவு பொருட்கள் அடங்கிய தொகுப்பை வழங்கியுள்ளனர். 

உதவி பெறுபவர்கள் யார் என்று வெளியில் தகவலை பகிராமல் உரியவர்களுக்கு டோக்கன் கொடுத்து ஹபிபா ஹைபர் மாலில் உணவு தொகுப்பை பெற்றுக்கொள்ள ஏற்பாடு செய்துள்ளனர்.
இதற்காக பொருளாதார உதவி செய்த அனைத்து சகோதரர்களுக்கும் நன்றி தெரிவித்த அதிரை சகோதரர்கள் குழுமத்தின் அட்மின்கள் தொடர்ந்து தங்களுக்கு ஆதரவு அளிக்குமாறு கேட்டுக்கொண்டனர்.

Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...