அதிரை நகராட்சியின் முதல் தலைவராக பொறுப்பேற்றார் MMS தாஹிரா அம்மாள்

நடந்து முடிந்த அதிரை நகராட்சித் தேர்தல் திமுக 19 இடங்களில் வெற்றிபெற்று நகராட்சியை கைப்பற்றியது. அதிமுக 2 வார்டுகளிலும், சுயேட்சை 2 வார்டுகளிலும் SDPI, திமுகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட இந்திய கம்யூனிஸ்டு, முஸ்லீம் லீக், பாஜக தலா ஒரு வார்டிலும் வென்றுள்ளனர்.

வாக்கு எண்ணிக்கை முடிந்து ஒரு வாரம் கடந்தும் அதிரை திமுகவில் இருக்கும் உள்கட்சிப் பூசல் காரணமாக நகர்மன்ற தலைவர் யார் என்ற இறுதி முடிவு எட்டப்படாமலேயே உள்ளது. இந்த நிலையில் நேற்று முந்தினம் அதிரை நகர்மன்ற உறுப்பினர்கள் பதவியேற்பு விழா நடைபெற்றது.

இதனிடையே நகர்மன்ற தலைவராக 10 வது வார்டில் வெற்றிபெற்ற MMS அப்துல் கரீமின் மனைவி தாஹிரா அம்மாள் திமுக சார்பில் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து இன்று அவர் போட்டியின்றி நகராட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார்.

அவருக்கு திமுக மற்றும் கூட்டணி கட்சி பிரமுகர்கள், அரசு அலுவலர்கள், காவல்துறையினர் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

Post a Comment

0 Comments