தெரு, குடும்பவெறி கொண்ட அதிரையில் பிறந்தவன் என்று சொல்லவே வெட்கப்படுகிறேன்

Editorial
3
ஊடகத்திலும், பல்வேறு நிகழ்வுகளிலும், பொதுதளங்களிலும் சாதி, மத ஏற்றத்தாழ்வுக்கு எதிராகவும், சமூக நீதிக்காகவும் குரல் கொடுத்து வருகிறேன். அந்த நேரத்தில் எல்லாம் மனதில் ஒரு உறுத்தல் இருந்துகொண்டே இருக்கும். ஆம், நான் சார்ந்த அதிரையிலும் இந்த ஏற்றத்தாழ்வு தெரு, குடும்ப அடிப்படையில் உள்ளதே என்று...

அதுவும் எந்த இஸ்லாம் மார்க்கம் சமத்துவத்தை போதித்ததோ, ஏற்றத்தாழ்வை வேரறுத்ததோ, பெருமையை பாவம் என்றதோ அந்த மார்க்கத்தை நன்கு கற்று பின்பற்றி வருபவர்களிடம் இந்த தெரு, குடும்ப வெறி வாழையடி வாழையாக தலைதூக்கி இருக்கிறது. மக்களிடம் தெரு பெருமையும், குடும்ப பெருமை உச்சக்கட்டத்தில் உள்ளதை வெளிப்படையாக நான் இங்கு பதிவு செய்கிறேன். இதில் ஆண்கள், பெண்கள், சிறுவர்கள், முதியவர்கள் என யாரும் விதிவிலக்கு அல்ல... 

கட்சி, பதவி, பணவெறி எல்லாம் மாறுதலுக்கு உட்பட்டது. நிரந்தரமானது அல்ல. ஆனால், தெரு, குடும்பவெறி தலைமுறை தலைமுறையாக கடத்தப்படுகிறது. ஓதி, படித்த தலைசிறந்த உலமாக்கள் என போற்றப்படுபவர்களிடம் கூட இந்த குடும்ப, தெருவெறி புரையோடிப்போய் இருப்பதை பார்க்க முடிகிறது. இதை பற்றி பேசுங்க ஹஜ்ரத், வீடு வரதட்சனை பற்றி பேசுங்க ஹஜ்ரத் என்றால் கப் சிப் ஆகிவிடுகிறார்கள். நமக்கு எதுக்கு வம்பு என ஒதுங்கிக் கொள்கிறார்கள்.

சைத்தானுக்கும் தான் எல்லாம் தெரிந்திருந்தது. ஆனால், மனதில் தான் உயர்ந்தவன் என்ற பெருமை இருந்ததால் அல்லாஹ்வால் சபிக்கப்பட்டான். இங்கு எத்தனை பேர் அல்லாஹ்வால் சபிக்கப்பட இருக்கிறோமோ.. கடுகளவு பெருமை இருந்தாலும் சுவர்க்க செல்ல முடியாது என இஸ்லாம் சொல்கிறது. அல்லாஹ் பாதுகாப்பான்...

வெளியூர் சென்று படிக்காமல்,  வெளியூர் நண்பர்களிடம் பழகாமல், சமூக நீதி குறித்து கற்றுக்கொள்ளாமல், ஊடகத்துறைக்குள் செல்லாமல் இருந்திருந்தால் நானும் தெரு, குடும்ப வெறியனாக இருந்திருப்பேனோ என்னவோ...

மாற்றிக்கொள்ளுங்கள் என் அருமை சகோதரர்களே... எல்லோரும் சமம்... வார்த்தைக்கு வார்த்தை சங்கி, பார்ப்பான், RSS என திட்டுகிறோமே... சாதி, மதத்தை வைத்து ஏற்றத்தாழ்வு பார்க்கும் அவர்களுக்கும் தெரு, குடும்பத்தை வைத்து ஏற்றத்தாழ்வு பார்க்கும் நமக்கும் என்ன வித்தியாசம் உள்ளது என ஒரு நிமிடம் சிந்தித்து பாருங்கள்.

மறுமை நாளில் எந்த குடும்பம், எந்த தெரு என்ற அடிப்படையில் அல்லாஹ் நமக்கு சுவர்க்க நரகத்தை தீர்மானிக்கப்போவதில்லை. நமது நற்குணமும் நல் அமல்களுமே நம்மை யார் என்று முடிவு செய்யும். அங்கு நமது தாயோ, குடும்பமோ, தெருவோ நமக்காக பரிந்துரைக்காது. அல்லாஹ்வின் பார்வையில் அனைத்து அடியார்களும் சமமே...

இதற்காக நீங்கள் ஆயிரம் விளக்கங்களை தரலாம். ஆனால், ஆழ் மனதிடம் உங்களை நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள். நமது மனதில் பெருமை இருக்கிறதா இல்லையா என்று.

அல்லாஹ் நமது உள்ளங்களை தூய்மைபடுத்துவானாக..

- நூருல் இப்னு ஜஹபர் அலி

Post a Comment

3Comments
  1. தகுந்த நேரத்தில் சரியான முறையில் உங்களது கருத்து வரவேர்கதக்கது.

    ReplyDelete
  2. Welcome Bonus, Code and Facts - JTM Hub
    What is a slot machine? What is a 천안 출장샵 slot machine? Which is the fastest-growing 화성 출장샵 casino game? Can you 전주 출장마사지 play 부천 출장마사지 one of these 광주 출장마사지 games on your device?

    ReplyDelete
Post a Comment
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...