அதிரையில் வானவேடிக்கை காட்டிய இமாம் ஷாபி பள்ளி... வாய் பிளக்க வைத்த AIR SHOW

Editorial
0
தஞ்சை: அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி பள்ளியில் இன்று பள்ளி மாணவர்களால் சிறு விமானம் கட்டமைத்து பறக்கவிடும் கண்காட்சி AIR Show மாலை 4.30 மணி அளவில் நடைபெற்றது.

இதில் 65 மாணவர்கள் பங்கேற்று தங்களால் கட்டமைக்கப்பட்ட 13 விமானங்களை காட்சிக்கு வைத்திருந்தனர். திருச்சி மாவட்டத்தில் இருந்து வந்த புரொப்பலர் டெக்னாலஜிஸ் மாணவர்களுக்கு பயிற்சி கொடுத்தனர். அவர்களால் தயாரிக்கப்பட்ட 13 விமானங்களில் மூன்றினை பறக்கவிட்டனர்.

இதைக் காண 400 முதல் 500 பெற்றோர்கள் மாணவர்கள் மற்றும் அதிரையை  சார்ந்த பொது மக்கள் கலந்து சிறப்பித்தனர். இந்த  முயற்சியானது மாணவர்களின் கல்வி மேம்பாட்டுக்கும் செயல்திறன்  வளர்ச்சிக்கும் பெரிதும் உதவும்.
பள்ளியின் செயலாளர் ஜனாப் ஹாஜி எம்.எஸ்.தாஜுதீன் அவர்களும்  பொருளாளர், ஜனாப் இப்ராஹிம் அவர்களும் தாளாளர் எம். எஸ். முகமது ஆசம், முதல்வர் திருமதி மீனாகுமாரி மற்றும் பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் தலைவர் எம்.எஃப்.முஹம்மது சலீம் மற்றும் உறுப்பினர்கள் பெற்றோர்கள் மாணவர்கள் கலந்து கொண்டனர். 
இப்பயிற்சி மாணவர்களின் கல்வியை ஊக்குவிக்கும் என்பதில் எந்த ஐயமும் இல்லை. அதிராம்பட்டினத்தில் அமைந்துள்ள பள்ளிகளில் முதன்முறையாக இமாம் ஷாபியில் இப்படிப்பட்ட ஒரு பயிற்சி அரங்கம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...