அதிரை இமாம் ஷாபி பள்ளியில் விமானம் பறக்கவிடும் (AIR SHOW) கண்காட்சி

அதிரை அருகே நடுவிக்காட்டில் அமைந்துள்ள இமாம் ஷாபி (ரஹ்) பள்ளியின் இமாம் ஷாபி ஸ்போர்ட்ஸ் அகாடமி மற்றும் வேளாண் பள்ளியில் இன்று (29.03.2022) செவ்வாய்க்கிழமை அன்று மாலை 4 மணியளவில் பள்ளி மாணவர்களால் சிறு விமானம் கட்டமைத்து பறக்க விடும் கண்காட்சி (Air Show) நடைபெற உள்ளது. அதில் பெற்றோர்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு பள்ளி நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது. 

இந்த கண்காட்சியில் கலந்து கொள்ள வரும் பெற்றோர்கள் தாங்கள் அமர்வதற்கு தேவையான தரை விரிப்பை கொண்டு வருமாறும், நிகழ்ச்சி நடைபெறும் இடத்தின் நுழைவு பாதை செல்வதற்கு சிரமமாக இருப்பதால் மிகவும் வயதானவர்கள் தங்கள் நலன்கருதி வருவதை தவிர்த்து கொள்ளுமாறும் பள்ளி நிர்வாகம் அறிவுறுத்தி இருக்கிறது.

Post a Comment

0 Comments