அதிரை நகராட்சித் தேர்தலில் SDPI கட்சிக்கு TNTJ ஆதரவு


அதிராம்பட்டினத்தில் நகர்புற உள்ளாட்சித் தேர்தல் களம் சூடுபிடித்து இருக்கிறது. திமுக, அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் இந்த தேர்தலில் தனித்துப் போட்டியிட்டாலும் SDPI, மஜக, ஒருங்கிணைந்த சமுதாய கூட்டமைப்பு ஆகியவை அமைத்துள்ள கூட்டணி இந்த தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. 27 வார்டுகளை கொண்ட அதிரையில் 14 வார்டுகளில் வார்டுகளில் SDPI  கட்சி போட்டியிடுகிறது. இந்த நிலையில் அதிரை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் நிர்வாகிகளை சந்தித்த SDPI மற்றும் PFI நிர்வாகிகள் தேர்தலில் ஆதரவு கோரினர். 
இதனை ஏற்று அனைத்து விதமான ஆதரவையும் SDPIக்கு அளிப்பகாக TNTJ நிர்வாகிகள் உறுதி அளித்துள்ளனர். இஸ்லாமிய இயக்கங்கள் ஒன்றிணைந்து தேர்தலை சந்திக்க வேண்டும் என்ற விருப்பம் பல ஆண்டுகளாக மக்களிடம் இருந்து வரும் சூழலில் SDPI, மஜக, OSK கூட்டணிக்கு TNTJ அளித்துள்ள ஆதரவு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

Post a Comment

1 Comments