அதிரையில் உலக தரத்தில் உள்ளூர் கிரிக்கெட் போட்டி - LIVE, SCORECARD உடன் மாஸ் காட்டும் சிட்னி கிரிக்கெட் அணி

Editorial
0
அதிரையில் பல ஆண்டுகளாக சிறுவர்கள், இளைஞர்கள் கிரிக்கெட் விளையாடினாலும், பல்வேறு தொடர்களை நடத்தினாலும் நமதூரிலிருந்து மாநில அளவிலான அணிகளுக்கு செல்வதில்லை. இறுதியில் கிரிக்கெட் திறமையை மூட்டை கட்டிவிட்டு பொருளாதார தேவைக்காக வேறு பணிகளுக்கு சென்று விடுகின்றனர்.
இந்த நிலையை மாற்றும் வகையில் நமதூர் சிறுவர்களை இளம் வயதிலேயே தொழில்முறை போட்டிக்கு தயார்படுத்தும் முயற்சியில் அதிரை சிட்னி கிரிக்கெட் அணி நிர்வாகம் இறங்கியுள்ளது. 
இதற்காக  STITCH பந்தில் விளையாட சிறுவர்களுக்கு உரிய பாதுகாப்பு உபகரணங்களுடன் பயிற்சி அளித்து வருகின்றனர். நமதூர் சிறுவர்களை மேலும் ஊக்கப்படுத்தும் வகையில் 16 வயதுக்கு உட்பட்டோருக்காக சிட்னி ப்ரீமியர் லீக் என்ற பெயரில் கிரிக்கெட் தொடரை கடந்த ஆகஸ்டு மாதம் நடத்தினர்.
மேலும் ஒருபடி சென்று பிரபல தொழிற்முறை கிரிக்கெட் கிளப்புகள் பங்குபெறும் மாபெரும் தொழிற்முறை கிரிக்கெட் தொடரை சிட்னி அணியினர் கடந்த டிசம்பர் 29 ஆம் தேதி தொடங்கினர். 
இடையில் எதிர்பாராமல் மழை குறுக்கிட்டு போட்டிகள் தடைபட்டாமல் மனம் தளராமல் மைதானத்தை மீண்டும் தயார் செய்து தற்போது தொடரை சிறப்பாக நடத்தி வருகின்றனர். இப்போட்டியில் தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து பல தலைசிறந்த வீரர்கள் கலந்து கொள்ள இருப்பது குறிப்பிடத்தக்கது.
முதல் பரிசாக ₹50,000, இரண்டாம் பரிசாக ₹30,000 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அடுத்த 2 இடங்களை பிடிக்கும் அணிகளுக்கு தலா ₹15,000 பரிசுத் தொகை வழங்கப்பட உள்ளது. அனைத்தையும் கடந்து அதிரையில் இதுவரை இல்லாத வகையில் இப்போட்டியை யூடியூபில் பிரபல விளையாட்டு தொலைக்காட்சிகளை போல் SCORECARD, வர்ணனையுடன் சிட்னி அணியினர் நேர்த்தியாக நேரடி ஒளிபரப்பு செய்து வருகின்றனர்.
இதனால் வெளிநாடுகள், வெளியூர்களில் வாழும் அதிரை மக்களும், தொடரில் விளையாடும் மற்ற அணி ரசிகர்களும் கண்டுகளிக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த கிரிக்கெட் தொடரை நேரடி ஒளிபரப்பு செய்து வீரர்களின் விளையாட்டு திறமையை உலகறிய செய்து முன்மாதிரியாக உருவெடுத்துள்ள சிட்னி அணியினருக்கு அதிரை பிறையின் சார்பில் பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.
நேரலையை காண:

Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...