அதிரையில் கேமராவை நாடாத உண்மையான சமூக ஆர்வலர்

Editorial
0
பிலால் நகரில் வசித்து வருபவர் அஹமது ஜலாலுதீன். இந்த மழைக் காலத்தில் செடியன்குளம் நிரம்பி வழியத் துவங்கிய நாள் முதல் தினந்தோறும் வேறு எவரையும் எதிர்பார்க்காமல் யாருடைய உதவியையும் நாடாமல், கேமராக்கள் கண்களை எதிர்பார்க்காமல், சமூக ஊடக விளம்பரத்துக்காக இல்லாமல் கையில் ஒரு கம்பியை வைத்துக் கொண்டு வடிகால் நீர்வழிப் பாதைகளில் உள்ள குப்பைகளால் ஏற்படும் அடைப்புகளை நீக்கி சுத்தம் செய்து வருகிறார்.

தினந்தோறும் காலை நேரத்தில் தொண்டாற்றி வரும் அஹமது ஜலாலுத்தீனால் அடைப்பு ஏற்படாமல் நீர் செல்கிறது. இவர்களுக்கு அதிரை பிறை வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது.

Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...