அதிரையில் பழமையான தர்ஹாவை மதர்சாவாக மாற்ற முடிவு... இனி கந்தூரி நடைபெறாது என அறிவிப்பு

Editorial
0
அதிராம்பட்டினத்தில் மேலத்தெரு, கடற்கரைத் தெரு, புதுத்தெரு சின்னதைக்கா ஆகிய இடங்களில் பழமை வாய்ந்த 3 தர்ஹாக்கள் உள்ளன.  காலம் காலமாக நமது ஊரில் கொடிகட்டி பறந்துவந்த இந்த தர்ஹா, கப்ர் வழிபாடு மீதான ஈடுபாடு கடந்த 10 முதல் 15 ஆண்டுகளில் மக்களிடம் ஏற்பட்ட தவ்ஹீத் சிந்தனையால் பெரும் அளவு குறைந்துள்ளது.

இந்த நிலையில், சின்ன தைக்கா தெருவை சேர்ந்த மக்கள் ஓரிரைக் கொள்கையால் மனமாற்றம் அடைந்து தர்ஹா வழிபாட்டை வெறுக்கத் தொடங்கினர். தற்போது தைக்கா தெரு தர்ஹாவை சிறார்களுக்கான மதர்சாவாக மாற்ற இருப்பதாகவும், 10 நாட்கள் நடத்தப்படும் முஹர்ரம் ஆசுரா தின கந்தூரி இனி நடைபெறாது எனவும் பொது அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.

அதிரையில் இன்னும் தர்ஹா, கப்ர் வழிபாட்டில் திளைத்திருக்கும் மக்களை இஸ்லாமிய ஓரிரைக் கொள்கை நோக்கி திரட்டுவதற்கான முதல் கல்லை சின்ன தைக்கால் மக்கள் எடுத்து வைத்துள்ளனர்.

Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...