70களில் தமிழ்நாட்டை கலக்கிய அதிரை கால்பந்து வீரர் பீர் முஹம்மதுவை தெரியுமா?

Editorial
0
1970ம் ஆண்டில் அதிராம்பட்டினத்திலிருந்து நாகூருக்கு குடிபெயர்ந்தவர். சிறுவயதிலிருந்தே சிறந்த கால்பந்தாட்ட வீரராக தமிழக அளவில் வலம் வந்தவர்.

1971-76 களிலேயே தமிழக அளவில்  கால்பந்தாட்டத்தில் முன்னணி வீரராக சிறந்து விளங்கியவர் பல போட்டிகளில் விளையாடி 83 வெற்றி கோப்பைகளை தன்வசப்படுத்தியவர் சகோதரர் பீர் முஹம்மது. 

நாகூரில் அன்றைய ஆட்டு தொட்டி மைதானம், KRC மைதானத்தில் விளையாடியதையும், சக வீரர்களை பற்றியும் உற்சாகம் பொங்க நினைவுகூர்ந்தார்.

ஜமால் முஹம்மது கல்லூரி, அழகப்பா கல்லூரிகளிலும் 
அந்த காலத்தில் தமிழகத்தில் இருந்த அனைத்து football clubகளிலும்  விளையாடி மக்களின் கவனத்தை ஈர்த்து சிறந்த விளையாட்டு வீரர்களில் ஒருவராக அறியப்பட்ட பீர் முஹம்மதுவிற்கு அந்நாட்களில் அரசுவேலைகள் பல தேடி வந்த வண்ணம் இருந்துள்ளது.

காவல்துறையிலும் இணையுமாறு அழைப்பு வந்துள்ளது. ஆனாலும் எதுவுமே சாத்தியமில்லாமல் போனது பீர் முஹம்மதுக்கு காரணம் அரசு வேலைகளுக்கு குறைந்தது SSLC 10ம் வகுப்பு படித்திருக்க வேண்டும் (அவர்  3ம் வகுப்பே படித்திருந்தார்) என்ன சிறப்பு அம்சங்கள் நம்மிடமிருந்தாலும் அடிப்படை கல்வியின்  முக்கியத்துவத்தை நமக்கு உணர்த்தி பேசினார்.

இருப்பினும் உடல் உழைப்பில் அதிகம் நாட்டம் கொண்ட பீர் முஹம்மது.தனது அண்ணனின் மூலம் தொழிலை கற்றுக்கொண்டு கடந்த 26 ஆண்டுகளாக நாகூர் மெயின் ரோட்டில் சைக்கிள் கடை நடத்தி வந்தார். இந்த சிறிய வருமானத்தில் தான் தனது மனைவியுடன் வாழ்ந்து வந்தார்.கடின உழைப்பாளி.

இந்நிலையில் ஆறு மாதங்களுக்கு முன்பு எதிர்பாராத விதமாக 73 வயதான சகோதரர் பீர் முஹம்மதுவை மாடுமுட்டியதில் படுகாயம் அடைந்து  மிகவும் சிரமத்திற்குள்ளாகினார்.

இன்று நான் அவரை சந்திக்க நேர்ந்த போது அவர் கூறியதாவது..

"சைக்கிள் கடை வருமானத்தில் தான் எனது அன்றாட வாழ்க்கையை ஓட்டி கொண்டிருந்தேன். தற்போது 6 மாதமாக உடல்நிலையும் பாதிக்கப்பட்டுள்ளதால் முற்றிலும் வருமானமின்றி வீட்டில் முடங்கியுள்ளேன்.

எனக்கு இப்போது தான் உடல்நிலை கொஞ்சம் கொஞ்சமாக தெறி வருகிறது. எழுந்து நிற்க முடிகிறது
இரண்டு கைமனிகட்டு எழும்பிலும் அடிபட்டதில் வெயிட் தூக்க முடியவில்லை. கொஞ்ச நாளில் அது சரியாகிவிட்டால் மீண்டும் தொழில் செய்ய முயற்சிப்பேன் என்றார் நம்பிக்கையுடன்.

தற்போது மருத்துவத்திற்கும், அன்றாட குடும்ப செலவிற்கு வழியின்றி சிரமத்தில் உள்ள பீர் முஹம்மதுவிற்கு விருப்பமுள்ள சகோதரர்கள் தங்களால் இயன்ற உதவிகளை செய்யுங்கள் அவருக்கு பேருதவியாக இருக்கும்.

நாகூர் பீர் முஹம்மது
+916380258224

- எழுத்தாளர் இப்ராஹிம் அன்சாரி

Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...