அதிரை தாஜுல் இஸ்லாம் சங்கத்தில் நடைபெற்ற கல்வி வழிகாட்டி முகாம்

Editorial
0

தாஜுல் இஸ்லாம் சங்கம்  மற்றும்  தாஜுல் இஸ்லாம் இளைஞர் சங்கம் (TIYA ) இணைந்து நடத்திய கல்வி வழிகாட்டு முகாம் தாஜுல் இஸ்லாம் சங்க தலைவர் P.M.K.தாஜுதீன் அவர்கள் தலைமையில், சங்க நிர்வாகிகள் மற்றும் TIYA நிர்வாகிகள் முன்னிலையில் மிக சிறப்பாக நடைபெற்றது.

இதில் கல்வியாளர் டாக்டர் கார்த்திகேயன் கலந்துகொண்டு பவர் பாய்ண்ட் மூலம் மாணவர்களுக்கு வழிகாட்டினார்.

இதில் 80க்கும் மேற்பட்ட 10,11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்கள், கல்வியாளர்கள் மற்றும் முஹல்லா வாசிகள் கலந்துகொண்டு சிறப்பித்தனர். மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ள நிகழ்ச்சியாக அமைந்தது.

இது போன்று கல்வி வழிகாட்டி நிகழ்ச்சிகள் இனிவரும் காலங்களில் தொடர்ந்து நடைபெற இருப்பதால் பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் தவறாது கலந்து கொண்டு பயனடைய தாஜுல் இஸ்லாம் சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...