"பசியில்லா அதிரை உறவுகள்" ஹஜ் பெருநாளன்று மகத்தான உதவி.. மனம் குளிர்ந்த ஏழைகள்


அதிரையில் உணவின்றி பசியில் வாடும் ஏழைகளின் துயர் துடைக்க "பசியில்லா அதிரை உறவுகள்" என்ற சேவை அமைப்பு அண்மையில் தொடங்கப்பட்டது. அதன் ஒரு பகுதியாக இன்று ஹஜ் பெருநாளை ஏழைகளும் நல்ல உணவை சாப்பிட்டு மகிழ்வுடன் கொண்டாட வேண்டும் என்ற உயரிய நோக்கில் 600 பேர் சாப்பிடும் வகையில் 150 ஏழை குடும்பங்களுக்கு பிரியாணி செய்து விநியோகிக்கப்பட்டது.

இதுகுறித்து அமைப்பின் நிர்வாகி ஷபீர் கூறுகையில் "இறைவனின் திருபொருத்தத்தை மட்டுமே நாடிய இச்சேவையில் பொருளாதார பங்களிப்பு செய்த சகோதரர்களுக்கும், ஏழை எளியோரை இனங்கண்டு உரியோர்க்கு உணவை துரிதமாக கொண்டு சேர்க்க உதவிய சகோதரர்களுக்கு அந்த ஏக இறைவன் நன்மையை நாட வேண்டும் எனவும், முதற்கட்டமாக இச்சேவையை மாதாமாதம் செய்ய திட்டமிட்டுள்ளதாகவும், ஏழைகளுக்கு உணவு வழங்க விரும்புவோர் தங்களை தொடர்புகொள்ளலாம் என்றும்,  இல்லத்தின் விசேஷங்களில் மீந்து போகும் உணவையோ, அல்லது ஏழைகளுக்கு உணவளிக்க விரும்பும் சகோதரர்கள் செய்து தருகிற உணவு அல்லது நாங்கள் சமைத்து குடுக்க வேண்டும் என்று விரும்பினாலும் நாங்கள் அதனை செய்து அதற்கு உரிய ஏழைகளின் இருப்பிடத்திற்கே சென்று நேரடியாக விநியோகிக்கிறோம்." என்கிறார்.Post a Comment

0 Comments