அதிரையில் கொரோனா பாதித்த 25 வயது இளைஞர் அனுபவித்த கஷ்டங்கள்... அவரே சொல்கிறார் கேளுங்க!

Editorial
0
கோப்பு படம் : உண்மையான படம் அல்ல

கொரோனா பாதிக்கப்பட்ட அந்த இளைஞர் பேஸ்புக்கில் வெளியிட்ட பதிவு இது. அவரது நலன் கருதி தனிநபர் விபரங்களை பதிவிடவில்லை.

"நானெல்லாம் பெரிய பைல்வான் மாதரியும் நம்ம திங்கிர தீனுக்குலாம் கொரோனா நமக்கு எதுவும் பன்னிராதுனு நெனச்சிட்டு இருந்தேன்.
 
அவ்லோ அசால்டா இருந்ததால கொரோனா எனக்கு கொடுத்த பரிசு தான் அந்த மோசமான 14 நாட்கள்

பத்து பேரு சேர்ந்து ஊமகுத்தா குத்துனா எவ்ளோ உடம்பு வலி இருக்குமோ அவ்லோ வலி,

நம்ம விரும்பி சாப்பிட்ட எதையுமே சாப்பிட முடியது,

மூச்சுவிட முடியாத அளவுக்கு சளி தொண்டைய அடச்சிக்கும்,

கடுமையான ஜுரம் இருக்கும் ,

கை கால் தளர்ந்து போகும்,

சளியும் இரத்தமும் சேர்ந்து வரும் ,

மூச்சு காத்தை சுவாசிக்கும் போது அந்த காத்து கூட உங்க மூச்சு குழாய்ல வழிய ஏற்படுத்தும்,

மூனு வேலையும் கறி திண்ணாலும் திகட்டாத நமக்கு இஞ்சி பூண்டு போட்டு சமைச்ச சாப்பாடு கூட துர்நாற்றமா தெரியும்,

படுக்கும்போது முதுகு தண்டுல கடுமையான வழி இருக்கும்,

எல்லாத்தையும்விட ஒவ்வொரு நாளும்
மரண பயத்த காட்டும் அந்த உளவியல் தாக்குதலே நம்மை இன்னும் மோசமா பாத்திக்கும் 😐

கொரோனா நான் நினைக்கிறத விட கொடூரமானது கவனமா இருங்க


(குறிப்பு: நான் கொரோனாவுல இருந்து மீண்டு 20 நாள் ஆச்சு இன்னுமும் என்னால பழைய மாதிரி நடக்கவோ, கனமான பொருளை தூக்கவோ முடியல )

திடகாத்திரமான 25 வயது இளைஞருக்கே இந்த நிலை என்றால், வயதானவர்களுக்கு? இதை படித்து உணர்ந்து கவனமாக இருந்திடுங்கள் மக்களே..

Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...