பட்டுக்கோட்டை தொகுதியில் அதிமுக போட்டியில்லை... மீண்டும் ரங்கராஜனா?

Editorial
0


தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழகத்தின் அனைத்து கட்சிகள் சார்பில் வேட்பாளர் தேர்வு படலம்அரங்கேறி வருகிறது. இந்நிலையில் தஞ்சையின் முக்கிய தொகுதியாக பார்க்கப்படும் பட்டுக்கோட்டைக்கு யார் யார்வேட்பாளர்களாக அறிவிக்கப்படுவர் என்று மக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. 

இதனிடையே ஆளும் அதிமுக இன்று வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில், பட்டுக்கோட்டை தொகுதி அதிமுக வேட்பாளர் பட்டியலில் இடம்பெறவில்லை. எனவே பட்டுக்கோட்டையில் அதிமுக போட்டியில்லை என்பது தெளிவாகிறது. அதே சமயம் பாஜகவுக்கு பட்டுக்கோட்டை ஒதுக்கப்படவில்லை. 

எனவே  மூன்று முறை வெற்றி பெற்ற ரெங்கராஜன் தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் போட்டியிட வாய்ப்பு இருப்பதாக அரசியல் வட்டாரங்களால் சொல்லப்படுகிறது. 

Tags

Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...