அதிரை பைத்துல்மாலுக்கு ரமலானில் நிதியுதவி செய்ய கோரிக்கை

Editorial
0


புனித ரமளான் மிக விரைவில் நம்மை வந்தடைய இருக்கிறது. மார்க்கக் கடமைகளை நிறைவேற்றி, நல்ல அமல்களை அதிகமாகச் செய்து நன்மையைப் பன்மடங்காக அறுவடை செய்திடும் மாதம் தான் புனித ரமளான்.

அதிரை பைத்துல்மாலுக்கும் புனித ரமளான் ஓர் அறுவடை மாதமாகும். வருடம் முழுவதும் செய்யப்படும் மக்கள் சேவைக்குத் தேவையான நிதியுதவியைப் பெற்றிடும் மாதம் பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் அல்லாஹ்வின் திருப் பொருத்தத்தை நாடி ஜக்காத், ஃபித்ரா, ஸதகா போன்ற மார்க்கக் கடமைகளையும், உபரியான தான தருமங்களையும் நாம் செய்ய வேண்டியுள்ளது.

வல்ல அல்லாஹ்வின் பேரருளாலும், உங்கள் எல்லோரது ஆதரவினாலும் அதிரை பைத்துல்மால் இன்று வரை சிறப்பாகச் செயல்படுகிறது மாதாந்திர பென்ஷன் உதவி, ஃபித்ரா அரிசி பங்கீடு, ஆம்புலன்ஸ் உதவி, மருத்துவ உதவி வட்டியில்லா நகைக்கடன் என 22 வகைகளில் மக்கள் சேவை தொடர்கிறது.

கடந்த 2020-2021 ஆண்டில் செய்யப்பட்ட சேவைகளின் பட்டியல் தங்கள் பார்வைக்காக இணைக்கப்பட்டுள்ளது. இனியும், இன்ஷா அல்லாஹ் இப்பணிகள் தொய்வில்லாமல் தொடர வேண்டும். எனவே, தாங்களும், தங்களது நண்பர்கள் அனைவரும் தாராளமாக வேண்டுகிறோம் நிதியுதவி வழங்க வேண்டும் என அன்புடன் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...