அதிரை மக்களே உஷார்... வேகமாக பரவும் கொரோனா..!

Editorial
0


தமிழகத்தில் மீண்டும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. 400க்கும் குறைவாக பதிவாகிவந்த கொரோனா தற்போது 2200 ஐ கடந்துள்ளது. இதில் அதிகபட்சமாக சென்னை, செங்கல்பட்டு, கோவை மாவட்டங்களுக்கு அடுத்த இடத்தில் தஞ்சாவூர் மாவட்டம் உள்ளது.

இன்று ஒரேநாளில் 130 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று தஞ்சாவூரில் பதிவாகியுள்ளது. இதன் மூலம் கோரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 567 ஆக அதிகரித்துள்ளது. குறிப்பாக தஞ்சை, பட்டுக்கோட்டையில் பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு கொரோனா வேகமாக பரவி வருகிறது.

கொரோனா ஊரடங்கு தீவிரமாக அமலில் இருந்தபோதே அதிரையை கொரோனா பரவலும், பாதிப்பும் அச்சுறுத்தியது. தற்போது எந்த கட்டுப்பாடுகளும் இல்லை. எனவே மக்களாகிய நாம் கவனமாக கட்டுப்பாடுகளை பின்பற்ற வேண்டும்.

தேர்தல் பரப்புரை கூட்டங்களுக்கு செல்வோர் முகக்கவசம் அணிந்து விதிகளை பின்பற்ற வேண்டும். தொடர் காய்ச்சல், இருமல், சளி, தலைசுற்று இருந்தால் வீட்டு வைத்தியம் பார்க்காமல் மருத்துவரை அணுகுங்கள். முடிந்தால் கொரோனா பரிசோதனை செய்துகொள்ளுங்கள்.

கடந்த ஆண்டு போல் இப்போது கொரோனா நோயாளிகள் கொடுமைப்படுத்தப்படுவது இல்லை. உரிய சிகிச்சை, தனிமைப்படுத்தலுக்கு பின் வீடு திரும்புகிறார்கள். சிகிச்சைமுறையும் முன்னேறியுள்ளது. குணமடைவோர் விகிதமும் அதிகரித்துள்ளது. எனவே அக்கம்பக்கத்தினர் பேசுவார்கள் என்று அஞ்சியோ, தேவையற்ற வதந்திகளை நம்பியோ மருத்துவரை அணுகாமல் இருந்தால் நாளாக நாளாக நமக்கு தான் ஆபத்து நேரும்.

அதிரையில் அண்மைகால நிகழ்வுகள் சரியில்லை என தகவல் வருகின்றன. எனவே கடந்த ஆண்டு எந்த அளவு கட்டுப்பாடுகளும் இருந்தோமோ அதை தற்போதும் கடைப்பிடிப்பதன் மூலம் இக்கொடிய நோயில் நம்மவர்களை பறிகொடுப்பதை தவிர்க்கலாம்.

மக்கள் நலன் கருதி,

அதிரை பிறை



Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...