அதிரையில் ஆதரவற்ற 2 சிறுமிகளுக்கு உதவிடுவோம்

Editorial
1


நாகூர் ரியாஸ் அவர்களின் முகநூல் பதிவு

ஆதரவற்ற இருப்பெண் குழந்தைகளுக்கு ஆதரவளிப்போம்..!

நேற்று (28/02/2021) தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் சென்றிருந்த போது சகோதரர் ஹாஜி அவர்கள் என்னை பேருந்து நிலையம் அழைத்து சென்றார். அங்குள்ள இரண்டு பெண் குழந்தைகளை அறிமுகம் செய்து வைத்தார். அந்த பேருந்து நிலையம் தான் தற்போதைக்கு அவர்கள் வசிக்கும் வீடு. நான் சிரித்து கொண்டே அவர்களின் அருகில் உட்கார்ந்து பேச்சு கொடுத்தேன். பாவம்! கள்ளம் கபடம் இல்லா அந்த அப்பாவி  குழந்தைகள் சிரித்து கொண்டே என்னிடம் பேசினார்கள். அவர்கள் இருவரும் அக்கா தங்கை. மூத்தவளின் பெயர் சோபியா (வயது 7) இளையவள் பாதாம் பிரியா (வயது 4). அவர்களை காணும் போது எனது இரு மகள்கள் என் நினைவுக்கு வந்தனர். கூடவே அழுகையும் வந்தது, இதுப்போன்ற பிள்ளைகளை நினைத்து. இருப்பினும் அழுகையை அடக்கி கொண்டேன்.


இவர்களின் தாயார் சில மாதங்களுக்கு முன் இந்த இரு குழந்தைகளையும் அவரின் கணவரையும் விட்டு பிரிந்து சென்று விட்டார். தற்போது எந்த தொடர்பும் இல்லை. தந்தை தான் வளர்த்து வருகின்றார். அவராலும் சரியாக கவனித்து கொள்ள முடியவில்லை. பேருந்து நிலையம் தான் அவர்களின் வீடு என்பதால், அவர்கள் மிகுந்த சிரமப்பட்டு வருகின்றனர். 

எத்தனையோ ஆசிஃபாக்களை இந்த தேசம் சந்தித்துள்ளது. இவர்களும் அதுப்போன்று ஆகிவிடக்கூடாது. (இறைவன் பாதுகாப்பானாக.) ஹாஜி அவரால் முடிந்த சில உதவிகளையும் அவர்களுக்கு செய்து வருகிறார். 

இப்போதைக்கு இந்த குழந்தைகளை கவனித்து கொள்ளும் நல்லதொரு அனாதைகள் இல்லத்தில் சேர்ப்பதற்கு முயற்சி செய்து வருகிறார். என்னிடமும் இதுப்பற்றி உதவி கேட்டார்.

அனாதை குழந்தைகளுக்கு யார் உதவி செய்கிறாரோ அவருக்கு இறைவன் உதவி செய்வதாகவும், அத்தகைய நல்லோருக்கு சுவனம் கிடைக்கும் என்றும் நபிகள் நாயகம் அவர்கள் கூறியிருக்கிறார்.

முடிந்தவர்கள் அந்த குழந்தைகளுக்கு நிச்சயம் உதவலாம். ஹாஜி காகா அவர்களின் தொடர்பு எண்ணை கீழே தருகிறேன். மேலதிக தகவலுக்கு அவரை நீங்கள் தொடர்பு கொள்ளுங்கள்.

ஹாஜி தொடர்பு எண் : 9500280281

Tags

Post a Comment

1Comments
 1. பதிவை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி அதிரைபிறை நிர்வாகத்தினருக்கு💐💐.

  - இப்படிக்கு
  நாகூர் ரியாஸ்

  My WhatsApp number : 9385463516

  Facebook ID : Riyaz Nagore

  ReplyDelete
Post a Comment
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...