அதிரையர்கள் நள்ளிரவில் வீடு புகுந்து கைது - போலீசை கண்டித்து ஆர்ப்பாட்டம் அறிவிப்புஅதிராம்பட்டினம் கடற்கரை தெருவில் கடந்த சில நாட்களுக்கு ரேசன் கடை ஊழியர் மரணம் தொடர்பாக போலீஸ் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் நள்ளிரவு கடற்கரைத் தெருவை சேர்ந்த இளைஞர்களை சந்தேகத்தின்பேரில் போலீசார் வீடு புகுந்து கைது செய்துள்ளனர்.

பட்டுக்கோட்டை காவல்துறை துணை கண்காணிப்பாளர் புகழேந்தி தலைமையிலான 20க்கும் மேற்பட்ட காவலர்கள் விட்டின் கதவை உடைத்து இளைஞர்களை கைது செய்ததாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.


காவல்துறையின் இந்த நடவடிக்கையை கண்டித்து அதிரை அனைத்து முஹல்லா, இயக்கங்கள், கட்சிகள் சார்ப்பாக இன்று மாலை 4 மணிக்கு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவித்துள்ளனர்.

Post a Comment

0 Comments