அதிரையில் 6 நாட்கள் நடைபெறும் ஆதார் சிறப்பு முகாம்

Editorial
0


அதிரை பழஞ்செட்டித் தெருவில் உள்ல புதிய தபால் நிலையத்தில் வரும் 22ம் தேதி (திங்கள்கிழமை) ஆதார் சிறப்பு முகாம் தொடங்கி நடைபெற உள்ளது. 

27ம் தேதி சனிக்கிழமை வரை நடைபெறும் இம்முகாமில் புதிய ஆதார் கார்டு விண்ணப்பித்தல், பெயர் திருத்தம், முகவரி, தொலைப்பேசி எண், புகைப்பட மாற்றம் மற்றும் கைரேகையை பதிவு செய்யலாம்.

புதிய ஆதாருக்கு கட்டணம் வசூலிக்கப்படாது என்றும், திருத்தங்களுக்கு மட்டும் ரூ.50 கட்டணம் செலுத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிரை மக்கள் தேவையான ஆவணங்களுடன் முகாம் நடைபெறும் நாட்களில் தபால் நிலையம் வந்து பயன்படுத்திக் கொள்ளலாம்.

பின்குறிப்பு:  பழஞ்செட்டி தெருவில் இயங்கி வந்த தபால் நிலையம், தற்போது அதே பழஞ்செட்டி தெரு அச்சு ஆபீஸ் சாலையில் இயங்கி வருகிறது.


Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...