அதிரையில் அப்பாவிகளின் வயிற்றில் அடிக்கும் கட்டிட காண்டிராக்டர்கள்!

Editorial
1
வீடு கட்டுவது என்பது நம்மில் பலருக்கு கனவாகவே இருந்து வருகிறது. பல ஆண்டுகள் உழைத்து சேமித்த பணத்தை வீடு கட்டுவதற்காக செலவிடுகின்றனர் நமதூர் மக்கள். காரணம், நிம்மதியாக சொந்த வீட்டில் வாழ வேண்டும் என்று. ஆனால், அந்த நிம்மதி முழுவதையும் பறித்துவிடுகின்றனர் சில பணவெறி பிடித்த கட்டிட காண்டிராக்டர்கள்.

ஊரில் படித்து பட்டம் பெற்ற பல கட்டிட பொறியாளர்கள் இருந்தும் நண்பர், உறவினர், அனுபவம் வாய்ந்தவர் என்ற அடிப்படையில் காண்டிராக்டர்களிடம் வீடு கட்ட ஒப்பந்தம் செய்கின்றனர் மக்கள். அன்றிலிருந்து அவர்கள் பாடு திண்டாட்டமாகி விடுகிறது.

ஆம், வேலைக்கு ஆட்களை விடுவது தொடங்கி, கட்டுமானப் பொருட்களுக்கு உள் கமிஷன், வெளி கமிஷன் வைப்பது, கால தாமதம் செய்வது, ஒப்பந்தம் செய்யும்போது போட்ட தொகையை விட 50% - 60% தொகையை அதிகரிப்பது, காண்டிராக்ட் வருமானத்தை அதிகரிக்க பொருட்கள்  விலையை உயர்த்தி சொல்வது, அனுபவம் குறைவான கொத்தனார்கள், டைல்ஸ் ஒட்டுபர்கள், தொழிலாளர்களை குறைந்த ஊதியத்துக்கு அழைத்து வந்து, கணக்கில் முழு ஊதியத்தை மாற்றி பொய் கணக்கு எழுதுவது, அவர்களால் ஏற்படும் அதிகபட்ச பொருள் சேதத்தை கண்டும் காணாதிருப்பது, பல நாள் தாமதமாகி, இழு இழுவென இழுத்து கட்டுமானப் பணியின் இறுதிக்கட்டத்தில் தான் சில லட்சங்கள் செலவழித்ததாக பொய் கணக்கு எழுதி கூடுதல் கட்டணத்தை கேட்டு அதிர வைப்பது, தட்டிக்கேட்டால் இறுதிக்கட்ட சில பணிகளை செய்யாமல் அப்படியே போட்டுவிட்டு செல்வது என சொல்லிக் கொண்டே போகலாம்.

சந்தோசமான வீட்டில் குடியேற நினைத்தவர்கள் இதுபோன்றவர்களால் மன உளைச்சல் மற்றும் கடனாளியாவதே மிச்சம். இப்படி செலவழித்து கட்டிய வீடும் இவர்களின் தரமற்ற பணியால் ஓராண்டிலேயே வெடிப்பு விடத் தொடங்கி விடுவது தான் கொடுமையின் உச்சம். அது குறித்து கேட்டாலும் தட்டிக்கழிப்பது, கண்டும் காணாதிருப்பது என கொடுமைகள் தொடர்கின்றன. இறுதியாக மீண்டும் வேறொரு அதை சரி செய்ய சில ஆயிரங்கள் செலவழிக்கும் நிலை ஏற்படுகிறது. இப்படி வீட்டை கட்டிமுடித்தும் நிம்மதியிழந்து மக்களை புலம்ப விடுகின்றனர் காண்டிராக்டர்கள்.

இதுபோன்றவர்கள் பற்றி புகாரளிக்கவோ, நடவடிக்கை எடுக்கவோ கூட முறையான வழிமுறை மக்களுக்கு தெரிவதில்லை என்பதால் போனது போகட்டும் என மனக்குமுறலுடன் விட்டுவிடுகின்றனர். ஏமாற்றும் காண்டிராக்டர்கள் அடுத்த அப்பாவியின் வயிற்றில் அடிக்க கிளம்பி விடுகின்றனர்.

காண்டிராக்டர்கள், மேஸ்திரிகள் செய்யும் மோசடிகள் பற்றி விரிவாக எழுதியுள்ளார் பொறியாளர் மீரா உசேன்...

"பொறியாளர்கள் ஏன் வீடு கட்டும் போது தேவை? இப்போது உள்ள இந்த காலத்தில் வீடு கட்டுவது என்பது சாதாரணமான விஷயம் அல்ல. உங்களுக்கு வீடு கட்ட வேண்டும் அதற்கு குறைந்த செலவில் கட்ட வேண்டும். வீடும் தரமானதாகவும் இருக்க வேண்டும் உங்களின் ஆசைகளையும் பூர்த்தியடைய வேண்டும்.

உங்களுக்கு பல விளம்பரங்களுடன் பல சலுகைகள் உடன் நீங்கள் நினைத்தது போல் சதுரடி விலை குறைவாக கிடைக்கும். உதாரணம் 1200, 1300, 1400 என்றெல்லாம் கிடைக்கும்.

அதில் உள்ள நிறை குறைகளை கூறுகிறேன் 

நிறைகள்:
- நீங்கள் நினைத்ததை போல் குறைவான விலையில் கிடைக்கும்.
- அதற்கு நிறைய சலுகைகள் இலவசங்கள் கிடைக்கலாம்.

குறைகள்
- உங்கள் வீட்டின் கட்டுமானம் தரமானதா என்றால் கிடையாது
- குறைந்த விலையில் செய்து தருபவர்கள் விளம்பரத்தில் மட்டுமே தரம் என்ற வார்த்தை இருக்கும்.
- இங்கு பொறியாளர்கள் இல்லாமல் மேஸ்திரிகள் போதும் என்று ஒரு சில மேஸ்திரிகளும், வீடு கட்ட நினைப்பவர்களும் நினைக்கிறார்கள்.
- இது போல ஓரு சில பொறியாளர்கள் பில்டர்களும் ரேட்டை குறைத்து செய்பவர்களும் உண்டு.

எப்படிலாம் ஏமாற்று வேலைகள் நடைபெறுகிறது?

Earthwork  sand filling முடிந்த பிறகு 
P.C.C Plain cement concrete ratio விகிதம் M7.5 1:4:8 Foundation கனம் (6''thickness) 
போட வேண்டும். மேஸ்திரிகள் அவர்களின் செலவை குறைக்க pcc thickness குறைத்து விடுவார்கள். உதராணத்துக்கு ஒரு 570 சதுரடி வீட்டுக்கு 16 மூடை pcc போட செலவாகும் என்றால் இவர்கள் ஒரே ஒரு cement மூடை கான்க்ரீட்டை முடித்து வீடுவார்கள்.

கல் கட்டு வீடு என்றால்  rubble masonry in cement mortar 1:6 as per standard structural specification. அவர்கள் போடும் கலவை அவர்கள் பாணியில் 10:1, 12:1 என்றெல்லாம் மிச்சபடுத்துவார்கள். செங்கல் கட்டுமானத்தில் கலவை இதைபோலத்தான் இருக்கும். இன்னும் சொல்ல போனால் செங்கற்களுக்கிடையில் சாந்து கனம் மற்றும் சந்தை இருத்தி பூச மாட்டார்கள் செங்கல் கட்டுமானம் வலுவாக இருக்காது

Plastering அதைப்போல பூச்சு கனத்திலும் ஏமாற்றுவார்கள். பூச்சு வேலை மட்டும் நல்லா பூசின மாதிரி ஷோ காட்டுவாங்க 
அங்கே தான் வீடு கட்டுபவர்கள் விழுந்து விடுவார்கள் மேஸ்திரிகளின் கை வண்ணத்தில். 

R.C.C Roof slab M20 1:1.5:3 RCC (min. reinforcement) Roof slab design பன்னி போட வேண்டும். எத்தனை கம்பி எத்தனை mm போடனும் அந்த Roof slab one way slab two slab என்றெல்லாம் உள்ளது அதற்கு ஏற்றவாறு கம்பி போட வேண்டும். அவர்கள் பாணியில் Roof slab 10 mm போதும், பீம் படிகட்டு 12 mm போதும் என்று அவர்கள் மனம் போல் கம்பி கட்டுவார்கள். பலகை அடிப்பு ஒரே மட்டமாக இருக்காது. undulations மேடு பள்ளமாகவும் இருக்கும். 

Roof slab thickness கனத்தை குறைத்து விடுவார்கள் 5 "போடனும் 4 inch  3.5 inch கான்கிரீட் போடுவார்கள். அவர்கள் போடும் கான்கிரீட் தண்ணீர் அதிகமாக இருக்கும். concrete Water cement ratio சரியாக இருக்காது. vibrator போட வேண்டும். அப்போது தான் கான்கிரீட் HONEY COMBING வராது.
இப்படி பல வழிகளில் தங்கள் வேலையை மிச்சபடுத்துவதால் உங்களுக்கு சதுரடி விலைக்கு செய்து கொடுப்பார்கள். அதில் இலாபத்தை வேலைக்கு தேவையான தளவாட சமான்களை மிச்சப்படுத்தி சம்பாதித்து விடுவார்கள். பிறகு இதில் தரம் வெறும் வார்த்தையில் தான் இருக்கும்.


ரூப் வலுவாக இருக்கட்டும் என்று கம்பியை அதிகமாக போடுகிறீர்களா?  ரூப் கம்பி கட்டுதலில் மிகவும் ஆபத்தான தவறு என்ன? 

1. நல்ல பெரிய கம்பியை போட்டு 12mm, 10mm, அதிக இடைவெளி இல்லாமல் கம்பி கட்டவேண்டும். கம்பியின் இடைவெளியை குறைத்து தடிமனான கம்பியை போட்டு கட்டினால் ரூப் வலுவாக இருக்கும் என்பது முற்றிலும் தவறு மற்றும் ஆபத்தானது.

இந்திய தர ஆணையம்(Indian Standards) இது குறித்து சொல்வது என்ன?

நாம் ரூப் ஓட்டுவது RCC வைத்து தான். அதாவது reinforced cement concrete(கம்பியுடன் மற்றும் கான்கிரீட்). இதில் இரண்டு பொருட்கள் இணைகின்றன. கான்கிரீட் என்பது ப்ரீ டில்(Brittle) தன்மை கொண்டது.  அதாவது பிஸ்கட்டை போல உடயும் தன்மை கொண்டது. கம்பி வலையும் தன்மை(Ductile) கொண்டது. ஒரு கம்பியை இரண்டாக உடைக்க குறைந்தது 10-15 முறை வளைத்து நிமிர்த்த வேண்டும். இதை டக்டில் தன்மை என்று கூறப்படுகிறது.

ஒரு ரூப் தன் வலுவை இழந்து வீணாகும் பட்சத்தில் முதலில் கம்பி வீணாக ஆக வேண்டும். அப்போதுதான் வீட்டினுள் இருப்பவர்கள் தப்பித்து வெளியேற கால அவகாசம் கிடைக்கும். ஏனெனில் கம்பி உடனே உடையாது. வளைந்து கொண்டே வந்து ஒரு கட்டத்தில்தான் உடையும்.

நீங்கள் கம்பியை தேவைக்கு அதிகமாக வலுவாக போட்டு கட்டுவதால் ஓவர் reinforcement ஆகும்போது, ஒரு பூமி அதிர்ச்சி அல்லது ரூப் வலுவிழப்பு ஏற்பட்டால் கம்பி வலுவாக நிற்கும். ஆனால் கான்கிரீட் fail ஆகிவிடும். Concrete fail ஆகி விழும்போது, உள்ளே இருக்கும் மனிதர்கள் தப்பிக்க கால அவகாசம் இருக்காது. ஏனெனில் கான்கிரீட் பிரிடில் தன்மை கொண்டது. பிஸ்கட்டை போல உடையும்.

இதனால் தான் எப்பொழுதும் கம்பி (ஸ்டீல் failure) முதலில் failure ஆக வேண்டும் ரூப் வலுவிழக்கும் பொழுது. 

இதனால் ரூப் rcc எப்பொழுதும் under reinforced or balanced section ஆக டிசைன் செய்ய வேண்டும். இது உங்களுக்கு லாபம் மட்டும் அல்ல. இதுவே பாதுகாப்பும் கூட. இதற்கு கண்டிப்பாக ஒரு structural engineer அணுகி முறையான structural வரைபடம் பெற்று அல்லது அவரின் மேற்பார்வையில் கம்பி கட்டுதல் மிகவும் அவசியம்."

Post a Comment

1Comments
  1. Very very TRUE. These people has no religion & no faith in Almighty. Their only aim is making money by cheating others in all possible departments. Their workmen are like goons with no skills & no experience. They are only doing atrocities & careless rubbish work. This makes waste of money, and again we want to spend money immediately for repair. That is double the cost for the same work. If we ask about it, they told that they will do later. The 'later' or the 'tomorrow' never comes. If force the matter, then they submit false accounts and ask more money from us to shut our mouth. But, I sincerely hope & believe, Almighty's punishment is imminent. They are partners of satan.
    Please spread the matter to all over Adirai, and make them aware & teach them.
    By publishing the matter, really you are doing great good deeds. Almighty may reward you.
    People who affected know the great pain. Hard working people only know the value of each paise.

    ReplyDelete
Post a Comment
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...