அதிரையின் மிகச்சிறந்த சமூக சேவகர் ஹாலிக் மரைக்கா வஃபாத்

நடுத்தெருவை சேர்ந்த மர்ஹூம் மூ.செ.மு.ஹாபிஸ் மஹ்மூது அவர்களின் மகனாரும் மு.செ.மு.முஹம்மது ஹசன் அவர்களின் சகோதரருமான மு.செ.மு.அப்துல் ஹாலிக் அவர்கள் (29-07-2020) இரவு வஃபாத்தாகிவிட்டார்கள்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் 

அன்னாரின் ஜனாசா நாளை (30-07-2020) காலை 8 மணிக்கு மரைக்கா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

எந்த தெருவில் எந்த ஒரு பிரச்சனையாக இருந்தாலும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு மனுக்களை அனுப்பி தீர்வு காண்பவர் ஹாலிக் மரைக்கா அவர்கள். நடந்தே அனைத்து தெருக்களுக்கும் சென்று பழுதடைந்த மின் கம்பம், பழுதடைந்த சாலைகள், சுகாதாரம் உள்ள பல்வேறு மக்கள் நலன் சார்ந்த பிரச்சனைகளுக்காக பாடுபட்டவர்.

தனது உடல் நலன் பற்றி கருத்தில்கொள்ளாமல் பல ஆண்டுகளாக நமதூர் நலனுக்காக குரல் கொடுத்து வந்துள்ளார் ஹாலிக் மரைக்கா. பதவிக்கு வந்தால் அதை செய்வேன், இதை செய்வேன் என்று சொல்பவர்களுக்கு மத்தியில் எந்த பதவியிலும் இல்லாமல் மனுக்கள் மூலமாகவே பல நற்காரியங்களை செய்து முடித்துள்ளார்கள். 

நாளிதழ்களில் வரும் மக்கள் குறைகளுக்கான பகுதியில் அதிரையின் அடிப்படை பிரச்சனைகள் தொடர்பாக ஹாலிக் மரைக்கா எழுதிய மனுக்கள் பெரும்பாலும் இடம்பிடித்துவிடும். 

விளம்பரத்துக்காக, போட்டோவுக்காக சமூக சேவை செய்பவர்களுக்கு மத்தியில் அல்லாஹ்வின் திருப்திக்காக மக்கள் பணியில் தன்னை அர்ப்பணித்துக் கொண்ட ஹாலிக் மரைக்கா அவர்களை அல்லாஹ் பொருந்திக் கொள்வானாக.

அன்னாரது குடும்பத்துக்கு அல்லாஹ் பொறுமையை தருவானாக. அன்னாரின் மறைவுக்கு அதிரை பிறை குழுவின் சார்பாக இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம்.

- அதிரை பிறை

Post a Comment

2 Comments

  1. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்...
    அல்லாஹ் இவரது பாவங்களை மன்னித்து உயரிய ஜன்னத்துல் ஃபிர்தௌஸ் எனும் சுவனபதியை நசீபாக்குவானாக..

    -ஆமீன்

    ReplyDelete
  2. INNA LILLAHI WAINNA ILAIHI RAJIWOON..

    ReplyDelete