அதிரை ஷிபா மருத்துவமனையிடம் விளக்கம் கேட்க அனைத்து முஹல்லா கூட்டமைப்பு முடிவு

அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பின் சார்பில் அதிராம்பட்டினம் மேலத் தெரு தாஜுல் இஸ்லாம்
சங்கத்தில், அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பின் ஆலோசனை கூட்டம் மேலத்தெரு துணைத் தலைவர் ஜனாப் MMS.முஹம்மது இக்பால் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இதில் அதிரை அனைத்து முஹல்லா தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள், மேலத்தெரு இளைஞர் அமைப்பினர் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.

இவ்வாலோசனை கூட்டத்தில் கீழ்காணும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

தீர்மானம் 1 :
அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பின் செயல்பாடுகள் இன்னும் சிறப்பாக அமைத்திட  அதிரையை சுற்றி உள்ள கிராமங்களையும் ஒன்றிணைத்து 
அதிரை அனைத்து சமுதாய ஒருங்கிணைப்பு கமிட்டி ஒன்று ஏற்படுத்துவது என்று முடிவு செய்யப்பட்டது.

தீர்மானம் 2:
பரவி வரும் கொரோணா நோயை கட்டுக்குள் கொண்டு வரும் ஒரு முயற்சியாக அதிரையில் உள்ள அனைத்து தெருவிலும் ஒரு குழு ஒன்று அமைத்து மக்களுக்கு உதவுவது என்று தீர்மானிக்க பட்டது.அது சம்பந்தமான சாத்தியக்கூறுகள் பற்றி ஆராய ஒரு குழு அமைக்கப்பட்டது.

தீர்மானம் 3:
அதிரை பேரூராட்சி ஒத்துழைப்பை பெற்று அதிரம்பட்டினத்தில் பொது சுகாதாரத்தை மேலும் மேம்படுத்துவதற்கு அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளுவது என்று முடிவு செய்யப்பட்டது.

தீர்மானம் 4: 
அதிரம்பட்டினத்திற்கு நசுவினி ஆற்றிலிருந்து வீணாக கடலில் கலக்கும் தண்ணீரை திருப்பி நமதூரில் உள்ள ஏரி, குளங்களை முறையாக நிரப்ப அதிரை பேரூராட்சிக்கு கோரிக்கை வைப்பது என முடிவு செய்யப்பட்டது.

தீர்மானம் 5: 
அதிரையில் சமீபத்தில் நடந்த கர்ப்பிணி பெண்ணின் மரணம், உள்ளிட்ட  பொது மருத்துவம் குறித்து நமதூரில் உள்ள  
ஷிஃபா மருத்துவமனை நிர்வாகத்தை தொடர்பு கொண்டு விளக்கம் பெறுவது என்றும், அதன் மூலம் ஊர் மக்களின் ஐயம் போக்குவது என்று தீர்மானிக்கப்பட்டது.

செயலாளர் நன்றி உரை வாசித்த பிறகு கஃப்பாரவுடன் கூட்டம் இனிதே நிறைவு பெற்றது.

Post a Comment

0 Comments