அதிரை மக்களே... கொரோனா பரவாமல் பாதுகாப்பாக குர்பானி கொடுக்க இந்த வழிமுறைகளை பின்பற்றுவோம்

Editorial
0
நாடு முழுவதும் நாளை ஹஜ் பெருநாள் கொண்டாடப்பட உள்ளது. ஹஜ் பெருநாளை முன்னிட்டு கால்நடைகளை அறுத்து உறவினர்கள், ஏழைகளுக்கு விநியோகிப்பது மார்க்க நெறி. கொரோனா வைரஸ் தொற்று பரவி வரும் இந்த சூழலில் கால்நடைகளை பலியிடுவதற்கும், இறைச்சியை விநியோகிப்பதற்கும் முன்பாக கூடுதல் பாதுகாப்பு வழிமுறைகளை கடைபிடிக்க வேண்டியது அவசியமானது.

இதுகுறித்து உலக சுகாதார நிறுவனம், பல நாடுகள் பல்வேறு விதமான அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளனர். அதை தொகுத்து நமதூர் வழிமுறைக்கு தகுந்த வகையில் அதிரை பிறை சார்பாக வழங்குகிறோம்.

வழிமுறைகள்: 
1. நோய்வாய்பட்ட, சோம்பலான நிலையில் உள்ள கால்நடைகளை அறுக்க வேண்டாம்.

2. விசாலமான இடத்தில் கால்நடைகளை பலியிடுங்கள்.

3. கால்நடைகளை அறுப்பவர், தோல் உறிப்பவர்கள், கறியை பங்குபிரித்து பைகளில் போடுபவர்கள் கொரோனா தொற்று உள்ளவராகவோ, காய்ச்சல் அறிகுறி உள்ளவராகவோ இருக்கக்கூடாது.

4. கால்நடைகளை அறுப்பவர், உறிப்பவர், இறைச்சியை பங்குபோடுபவர்கள் என அனைவரும் நிச்சயமாக மாஸ்க், கையுறை அணந்திருக்க வேண்டும்.

5. முறையாக சுத்தம் செய்த கைபடாத கத்தி, பாத்திரங்களை பயன்படுத்த வேண்டும்.

6. கறி கொண்டு செல்ல தூய்மையான பயன்படுத்தப்படாத புதிய பைகளை உபயோகிக்க வேண்டும்.

7. கறி விநியோகிப்பவர்களும் எந்த நோய் அறிகுறி இல்லாதவராக இருத்தல் அவசியம்.

8. வழக்கம் போல் அனைத்து வீடுகளுக்கும் கறி விநியோகம் செய்யாமல், குறிப்பிட்ட சில ஏழை, உறவினர் வீடுகளை தேர்ந்தெடுத்து அதிகளவில் கறியை வழங்கினால் அலைச்சல் குறையும். தொற்று பரவுவதற்கான வாய்ப்பும் குறையும்.

9. கறி விநியோகிப்பவர்கள் வீடுகளுக்குள் செல்லாமல் வாசலிலேயே வைத்து விட்டு வந்து தொலைப்பேசி மூலம் தகவல் கூறிவிடலாம்.

10. நாம் தான் கொடுத்தோம் என்று  பெறுபவர்களுக்கு தெரிய வேண்டும் என விரும்பினால், காகதத்தில் நமது பெயரை எழுதி பைகளில் பின் செய்துவிடலாம்.

11. வீட்டு வாசலிலேயே வாலி, சட்டி அல்லது பெரிய பாத்திரங்களை கறி போடுவதற்காக வைத்துவிடலாம்.

12. கறியை கொடுத்தவர்களும், பெற்றவர்களும் சானிடைசர் அல்லது சோப் போட்டு கைகளை நன்கு கழுவிக்கொள்வது அவசியம்.

13. குர்பானி கறியை உடனே சமைத்து சாப்பிடாமல் சில நாட்கள் கழித்து நன்கு வேகவைத்து பயன்படுத்துதல் நல்லது.

14. குர்பானி கறியை வீட்டு தங்கும் கூடங்கள், படுக்கையறை, சமையல் அறையில் பிறர் கைபடும் வகையில் வைக்காமல் ப்ரிட்ஜில் அதிகம் பயன்படுத்தப்படாத இடத்தில் வைத்துவிடலாம்.

15. விலங்குகளின் கழிவுகள், கறியை கொண்டு வந்த ப்ளாஸ்டிக் பைகள் அனைத்தையும் பாதுகாப்பான முறையில் வீட்டை விட்டு அப்புறப்படுத்துவதும் அவசியமானது.

16. கறி கொண்டு செல்ல பயன்படும் வாலி, பைக், ஆட்டோ போன்றவற்றை சோப் தூள் அல்லது கிருமி நாசினி கொண்டு தூய்மை செய்துவிட்டு மீண்டும் பயன்படுத்துங்கள்.

17. குர்பானி கறி விநியோகித்த பிறகு வீடு, வாசல், குர்பானி கொடுத்த இடத்தை  முழுவதுமாக தூய்மை செய்ய வேண்டும்.

18. ஆடு அறுத்தவர்கள், பங்கு பிரித்தவர்கள், கறி விநியோகம் செய்தவர்கள் அனைத்து வேலையும் முடிந்த பிறகு குளித்துவிட்டு, அணிந்திருந்த உடைகளை நன்றாக கழுவி மாற்று உடைகளை அணிந்துகொள்ளலாம்.

19. குழந்தைகள், வயது முதிர்ந்தவர்கள், சர்க்கரை, இரத்த அழுத்தம் உள்ளவர்கள், கர்ப்பிணி பெண்கள் பணிகளில் ஈடுபவதை தவிர்த்துக் கொள்ளலாம்.

20. கூட்டுக்குர்பானி கொடுக்கும் அமைப்புகளுக்கும் இது பொருந்தும். கறி வழங்கும் இடத்தில் மக்கள் சமூக இடைவெளியுடன் நிற்கிறார்களா? மாஸ்க் அணிந்துள்ளார்களா என்பதை உறுதிபடுத்திக்கொள்ளவும்.


ஜமாஅத்துல் உலமா சபை வெளியிட்டுள்ள அறிவிப்பு:

Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...