அதிரையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 22 வயது இளைஞர் - உதவுவதற்கு இணைந்த தமுமுக - PFI

அதிரையை சேர்ந்த 22 வயது இளைஞர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு திருச்சிக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து அந்த இளைஞரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறு திருச்சி தனியார் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்து ஊருக்கு அனுப்பி வைத்தது.

ஊருக்கு வந்த அவருக்கு தஞ்சாவூர் அழைத்து செல்ல ஆம்புலன்ஸ் கிடைக்கவில்லை. இது தொடர்பாக அதிரை பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பை சேர்ந்த வழக்கறிஞர் முஹம்மது தம்பியை அழைத்து உதவி கேட்டுள்ளனர் சம்பந்தப்பட்ட குடும்பத்தினர்.

இதனை தொடர்ந்து அதிரை தமுமுக சார்பில் கொரோனா நோயாளிகளை அழைத்து செல்வதற்காக பேரூராட்சியிடம் வழங்கப்பட்ட ஆம்புலன்ஸின் உதவியை முஹம்மது தம்பி நாடியுள்ளார். ஆம்புலன்ஸ் இருந்தாலும் ஓட்டுநர் இல்லை என்று பேரூராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து தங்கள் அமைப்பிடம் ஓட்டுநர் இருப்பதாகவும் ஆம்புலன்ஸ் மட்டும் கொடுத்தால் போதும் என்றும் PFI தரப்பில் கேட்கப்பட்டுள்ளது. அதற்கு ஒப்புதல் அளித்ததை அடுத்து அந்த இளைஞர் PFI அமைப்பை சேர்ந்த ஓட்டுநரால் தமுமுக ஆம்புலன்ஸில் அழைத்து செல்லப்பட்டுள்ளார். அவர் முழு உடல்நலன் பெற அல்லாஹ்விடம் துஆ செய்வோம்.

இயக்கங்களுக்குள் கருத்து வேறுபாடுகள் ஆயிரம் இருந்தாலும் அனைவரும் மக்கள் நலன் சார்ந்தே பணிபுரிகிறார்கள் என்பதற்கு இதுவும் ஒரு சான்று. இயக்கங்களால் ஒற்றுமை இல்லை என்று கூறி பொய் பிரச்சாரம் செய்து குறை கூறி வருபவர்களால் வாட்ஸ் அப், பேஸ்புக்கில் மட்டுமே பேசிக்கொண்டிருக்க முடியுமே தவிர இதுபோன்ற உதவிகளை ஒருங்கிணைந்து செய்ய முடியாது என்பது நிதர்சனமான உண்மை.

Post a Comment

1 Comments