ZOOM ஆப்பில் நடந்த சவூதி வாழ் அதிரையர்களின் பெருநாள் சந்திப்பு நிகழ்ச்சி

Editorial
0
சவூதி வாழ் அதிரையர்களின் ஈத் மிலன் ஒன்றுகூடல் பெருநாள் சந்திப்பு நிகழ்ச்சி Zoom ஆப் வாயிலாக இன்று (செவ்வாய்) காலை 11.30 மணி அளவில் குர்ஆன் கிராத்துடன் துவங்கப்பட்டு ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை பரிமாறி கொண்டனர். இந்த ஒன்று கூடல் நிகழ்ச்சியில் சவூதி அரேபியாவில் பல்வேறு இடங்களில் வசிக்ககூடிய அதிரையர்கள் கலந்து கொண்டனர்.

அய்டாவின் மூத்த நிர்வாகி தாஜுத்தீன் வரவேற்புரை ஆற்ற நிகழ்ச்சி தொடங்கியது. இதில் அதிரை பைத்துல்மால் ரியாத் கிளையின் பொறுப்பாளர்களும் ஜித்தா அயடாவின் பொறுப்பாளர்களும் ரமலானில் ஆற்றிய பணிகளை குறித்து விளக்கம் அளித்தனர்.

இந்த சந்திப்பில் தற்போதைய சூழ்நிலையில் ஆரோக்கியத்தை பேணுவது குறித்தும் கொரோனா நோய் குறித்தும பல்வேறு கேள்விகளுக்கு மருத்துவர் அஜ்மல் விளக்கம் அளித்தார். அதைத் தொடர்ந்து விசா, பாஸ்போர்ட், விமான போக்குவரத்து தொடர்பான சந்தேகளுக்கு ஆரிஃப் அப்துல் சலாம் விளக்கம் அளித்தார். அய்டாவின் முன்னாள் தலைவர் ஹபீபுர் ரஹ்மான் அவர்களின் நன்றியுறையோடு சந்திப்பு இனிதே நிறைவுற்றது.

Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...