அதிரை கொரோனா இல்லாத பகுதியாகி வருகிறது - சுகாதாரத்துறை அதிகாரி பேச்சு

Editorial
0
அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் கொரோனா தடுப்புப்பணி தொடர்பாக சுகாதாரத்துறையின் ஆய்வுக் கூட்டம் சமுதாயக் கூடத்தில் நடைபெற்றது.

இதில் தஞ்சை சுகாதாரத்துறை இணை இயக்குநர், சுகாதாரத்துறை ஆய்வாளர், பட்டுக்கோட்டை  மற்றும் அதிரை சுகாதாரத்துறை அலுவலர்கள், அரசு ஊழியர்கள் கலந்துகொண்டனர். இந்த கூட்டத்தில் சுகாதார கணக்கெடுப்பு பணிகளை மேற்கொள்வது தொடர்பாகவும், கொரோனா பரவல் தடுப்பு உள்ளிட்ட பல்வேறு விசயங்கள் தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது.

11 நாட்கள் நடைபெற உள்ள சுகாதார கணக்கெடுப்பின்போது மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள் பற்றி அதிகாரிகள் விளக்கினர். அதன்படி, வீடுவீடாக சென்று குடும்ப உறுப்பினர்கள், சக்கரை நோயாளிகள், சென்னையில் இருந்து அண்மையில் அதிரை மற்றும் சுற்றுவட்ட கிராமங்களுக்கு வந்தவர்கள் பற்றி கேள்விகள் கேட்டு பதிவு செய்யுமாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.

நோன்பு பிடித்துவிட்டு மக்கள் காலை நேரத்தில் உறங்குவார்கள் என்பதால், கணக்கெடுப்பு பணிக்கு செல்லும் ஊழியர்கள் அவர்களிடம் பொறுமையாக நடந்துகொள்ளுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தினர். அதிராம்பட்டினம். கொரோனா இல்லாத பகுதியாக தற்போது மாறி வருவதால், கணக்கெடுப்புக்கு செல்லும் ஊழியர்கள் அச்சப்படாமல் பணிகளை மேற்கொள்ளலாம் எனவும் அவர்கள் நம்பிக்கையூட்டினர்.

இந்நிகழ்ச்சியில், அதிரையில் கொரோனா தடுப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்ட வழக்கறிஞர் முகம்மது தம்பிக்கு அதிரை வட்டார மருத்துவ அலுவலர் ரஞ்சித் பொன்னாடை போர்த்தி அதிகாரிகள் பாராட்டு தெரிவித்தனர்.

Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...