இளம் இஸ்லாமியன் போட்டியாளர்களுக்கு அதிரை பிறையின் முக்கிய அறிவிப்பு

Editorial
0
இளம் இஸ்லாமியன் போட்டி ரமலான் தலைப்பிறையுடன் தொடங்கப்பட்டு வெற்றிகரமாக நடந்து வருகிறது. நாள்தோறும் ஏராளமான போட்டியாளர்கள் பங்குபெற்று கேள்விகளுக்கான பதில்களை வழங்கி வருகிறார்கள். இதன் மூலம் மார்க்க அறிவை அவர்கள் மேலும் வளர்த்துக் கொள்வதற்கான வாய்ப்பு ஏற்படுகிறது.

இந்த சூழலில் நாள்தோறும் இளம் இஸ்லாமியன் போட்டியில் பத்துக்கு பத்து மதிப்பெண் எடுப்பவர்களின் பெயர் பட்டியல் வெளியிடப்படும். அதை நேற்று முதல் வெளியிட வேண்டாம் என நிறுத்தியுள்ளோம். தவறாக பதிலளித்தவர்களும் தங்கள் பெயர் வரவில்லை என தொடர்ந்து நம்மை தொடர்பு கொண்டு கேட்டு வருவதால் இதுபோன்ற முடிவை எடுத்துள்ளோம். இறுதியாக வெற்றியாளர் பட்டியல் மட்டுமே வெளியிட முடிவு செய்துள்ளோம்.

அடுத்ததாக சில போட்டியாளர்கள் ஒரே வீட்டில் இருந்து பதில்களை தேடி ஒரே மாதிரியான பதில்களை வழங்குவதை கண்டறிந்துள்ளோம். இனி வரும் நாட்களில் பதில்களை பகிர்ந்தாலோ, ஒரே நபர் இரு வேறு மெயில், போன் நம்பர் மூலம் போட்டியில் பங்கேற்றாலோ முன் அறிவிப்பு இன்றி நீக்கம் செய்யப்படுவீர்கள்.

இந்த போட்டி நடத்தப்படுவதற்கான நோக்கம் இதில் உள்ள கேள்விகளுக்கான கேள்விகளை தேடும்போது மார்க்க விசயங்களை மக்கள் தெரிந்துகொள்ள வேண்டும் என்பது தான். அவர்களை பாராட்டுவதற்காக மட்டுமே பரிசு வழஙகப்படுகிறதே தவிர பரிசு அடிப்படை நோக்கம் இல்லை. ஆனால், பரிசை குறிக்கோளாக வைத்து பதில்களை பரிமாறி மோசடியாக போட்டியில் பங்குபெறும் சிலரால், சில தவறான பதில்களை அளித்தாலும் உண்மையாக பதில்களை தேடி கஷ்டப்பட்டவர்களது உழைப்பு பாழாகும். எனவே இந்த முடிவை எடுத்துள்ளோம்.

அனைவரும் ஒத்துழைப்பு தாருங்கள்.

Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...